EPFO புதிய வசதி: அவசர காலத்தில் PF கணக்கிலிருந்து உடனடியாக ரூ. 1 லட்சம் அட்வான்ஸ்
EPF உறுப்பினர்கள், திடீர் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக பிஎஃப் இருப்புத்தொகையில் இருந்து ரூ .1 லட்சம் முன்பணத்தை பெற முடியும்.
EPFO Advance: கொரோனா தொற்றுநோய் காலத்தில் நாம் நம் நாட்களை கழித்துக்கொண்டு இருக்கிறோம். நமக்கு எப்போது பணம் தேவைப்படும் என்பது தெரியாது. இத்தகைய சூழ்நிலையில், சில வழிமுறைகளைப் பற்றிய தகவல்களை வைத்திருப்பது எப்போதும் நன்மை பயக்கும். EPFO அதன் சந்தாதாரர்களுக்கு மிகச் சிறந்த வசதியைத் தருகிறது என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் உங்கள் PF கணக்கிலிருந்து ஒரு மணி நேரத்தில் பணம் பெற்று விடலாம். ஆம்!! இப்போது நீங்கள் உங்கள் Employees Provident Fund (EPF) அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து, உங்களது பிஎஃப் பேலன்ஸிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை முன்பணம் பெறலாம். அவசரகாலத்தில் உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் இந்த வசதியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளவது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் உங்களுக்கு 1 லட்சம் ரூபாய் கிடைக்கும்
EPF உறுப்பினர்கள், திடீர் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக பிஎஃப் இருப்புத்தொகையில் இருந்து ரூ .1 லட்சம் முன்பணத்தை பெற முடியும். இதற்காக அவர்கள் எந்த விதமான செலவு மதிப்பீடும் கொடுக்க வேண்டியதில்லை. ஜூன் 1 ம் தேதி, EPFO ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், கொரோனா உட்பட உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், மருத்துவ முன்பணமாக ரூ .1 லட்சம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
EPF உறுப்பினர்களுக்காக இந்த புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் ரூ .1 லட்சம் கிடைக்கும்.
இதில் பணம் எப்படி பெறுவது?
முன்னரும் மருத்துவ அவசர காலத்தில் EPF இலிருந்து பணம் எடுக்க முடிந்தது. ஆனால் இதற்காக நீங்கள் மருத்துவ பில்லை டெபாசிட் செய்ய வேண்டி இருந்தது. அதன் பிறகுதான் நீங்கள் முன்பணத்தை பெற முடியும்.
இந்த புதிய விதியில், நீங்கள் எந்த அட்வான்ஸ் பில்லையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. நீங்கள் முன்பணத்திற்காக விண்ணப்பித்தால் போதும், பணம் உங்கள் கணக்கில் வந்துவிடும்.
பணம் பெறுவதற்கான முழு செயல்முறை இதோ:
1. பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்க, முதலில் www.epfindia.gov.in என்ற இணையதளத்தின் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும். இப்போது கோவிட் -19 டேப்பின் கீழ் மேல் வலது மூலையில் உள்ள ஆன்லைன் அட்வான்ஸ் கிளெயிமில் கிளிக் செய்யவும்.
2. ஆன்லைன் சேவைகளுக்கு சென்று கிளெயிமை (படிவம் -31,19,10 சி மற்றும் 10 டி) பார்வையிடவும்.
3. இப்போது வங்கிக் கணக்கின் கடைசி
4 இலக்கங்களை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.
4. இதற்குப் பிறகு Proceed for Online Claim என்பதைக் கிளிக் செய்யவும்.
5. இப்போது டிராப் டவுன் செய்து, PF Advance-ஐ தேர்ந்தெடுக்கவும் (Form 31).
6. இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் காரணத்தைத் தேர்வு செய்யலாம்.
7. இப்போது நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்டு காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றி உங்கள் முகவரியை உள்ளிடவும்.
8. இதற்குப் பிறகு 'Get Aadhaar OTP' என்பதைக் கிளிக் செய்து ஆதார் இணைக்கப்பட்ட மொபைலில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
9. இப்போது உங்கள் கிளெயிம் ஃபைல் செய்யப்பட்டுவிடும்.
மதிப்பிடப்பட்ட பில்லைக் காட்டத் தேவையில்லை
முன்னரும், EPFO, மருத்துவ அவசரநிலைக்கு EPF கணக்கிலிருந்து முன்பணம் எடுக்க அனுமதித்திருந்தது. ஆனால், இந்தத் தொகை செலவு மதிப்பீட்டின் அடிப்படையில் அல்லது மருத்துவ பில்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே கிடைத்தது. ஆனால் இந்த மருத்துவ முன்பண கோரல் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதற்காக, EPF உறுப்பினர் எந்த பில் அல்லது செலவு மதிப்பீட்டை காட்டத் தேவையில்லை. விண்ணப்பித்தால் போதும், தொகை கணக்கில் மாற்றப்படும்.
ALSO READ: EPFO Alert: PF அக்கவுண்ட் இருக்கா, அப்போ இதை உடனே செஞ்சிடுங்க
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR