புதுடெல்லி: நாட்டில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மக்களின் நிதிச் சுமையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பி.என்.ஜி (PNG) எரிவாயு ஒரு நல்ல வழியாக இருக்கிறது. PNG என்பது குழாய் மூலம் அளிக்கப்படும் எரிவாயுவாகும் (Piped Natural Gas). இது எல்பிஜியை விட மலிவானது. இதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலையில் பெரிய வித்தியாசம்


நாட்டின் தலைநகரான டெல்லியில், மானியம் இல்லாத 14.2 கிலோ வீட்டு எல்பிஜி சிலிண்டரின் (LPG Cylinder) விலை ரூ.899.50 ஆகும். இதன் மூலம் ஒரு கிலோ எரிவாயுவின் விலை ரூ.63.35 ஆகிறது. இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) இன் பிஎன்ஜி விலை சிறிதளவு உயர்ந்த பிறகும், ஒரு ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டரின் விலை ரூ.35.61 ஆகவே உள்ளது.


இது எல்பிஜியை விட மலிவானது


1 கிலோகிராம் எல்பிஜி, 1.16 ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டருக்குச் சமம். இந்த வழியில், 1 கிலோ எல்பிஜி எரிவாயுவுக்கு இணையான பிஎன்ஜியின் விலை ரூ.41.30 ஆக இருக்கும். அதாவது, இப்போது 1 சிலிண்டருக்கு ரூ.899.50 செலுத்தினால், அதே அளவிலான பிஎன்ஜிக்கு ரூ.586.46 மட்டும் செலுத்தினால் போதும். அதன்படி, ஒவ்வொரு மாதமும் ஒரு சிலிண்டரைப் பயன்படுத்தினால், ரூ.313.04 சேமிக்கலாம். 


ALSO READ | LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா?


பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்


PNG க்கு நீங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப பில் செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை குறைவாக பயன்படுத்தினால் பில்லும் குறைவாக வரும். இது தவிர, இதில் மற்றொரு நன்மையும் உள்ளது. குளிர்காலத்தில், எல்பிஜி சிலிண்டர்களில் உள்ள எரிவாயு உறைந்துவிடும், ஆனால் PNG இல் அத்தகைய பிரச்சனை ஏற்படாது. இதனுடன், கேஸ் சிலிண்டரைப் போல இது உங்கள் சமையலறையில் இடத்தை அடைக்காது. 


மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கு PNG ஐ கொண்டு செல்ல திட்டம் உள்ளது


நாட்டின் 70 சதவீத மக்களுக்கு பிஎன்ஜி இணைப்பு வழங்கும் திட்டத்தை மோடி அரசு (Modi Government) வகுத்துள்ளது. நாட்டின் 400 மாவட்டங்களில் சுமார் 4 கோடி PNG இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. 


சமீபத்தில், நகர எரிவாயு விநியோகத்திற்கான உரிமம் வழங்கும் நிறுவனங்களுக்கான ஏலச் சுற்றுகளின் 11 ஆவது சுற்றை அரசாங்கம் நிறைவு செய்தது. நாட்டின் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 228 பகுதிகளுக்கான நிறுவனங்களுக்கு CNG மற்றும் PNG உரிமங்கள் வழங்கப்பட உள்ளன.


ALSO READ | LPG Rate Increase: எரிவாயு விலை உயர்வால் பற்றி எரியும் கஜகஸ்தான்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR