SBI YONO Update:எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அவர்கள் வீட்டில் இருந்துக் கொண்டே கடன் வாங்கும் வசதியை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாரத ஸ்டேட் வங்கி (SBI Customers)அதன் மொபைல் அப்ளிகேஷனில் முன்-அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன்களை வழங்குகிறது.  இதற்கான வழிமுறைகளும் சுலபமானது தான்...


யோனோவில் கடன் பெறுவதற்கான செயல்முறையும் முழுவதுமாக டிஜிட்டல் முறையிலானது, எனவே கடன் வாங்க நினைப்பவர் எந்தவொரு ஆவணங்களையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமல்ல, கடன் வாங்குவதற்காக வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இந்த வசதி 24 மணி நேரமும் சேவை மற்றும் கடன்களுக்கான உடனடி ஒப்புதலுக்கு உறுதியளிக்கிறது. 


நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான எஸ்பிஐ வங்கி, கடந்த மாதம் யோனோவில் முன்-அங்கீகரிக்கப்பட்ட இரு சக்கர வாகனக் கடனான 'எஸ்பிஐ ஈஸி ரைடு' (SBI Easy Ride) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதையும் வங்கிக் கிளைக்குச் செல்லாமல், எஸ்பிஐ யோனோ செயலி மூலம் காகிதமில்லா செயல்முறையின் மூலம் பெறலாம்.  


ALSO READ: மாதம் ₹60,000 சம்பாதிக்க SBI வழங்கும் அரிய வாய்ப்பு; முழு விபரம்..!!


SBI YONO செயலியில் கடன் பெறுவது எப்படி?
முதலில், 567676 என்ற எண்ணிற்கு “PAPL<space><SBI சேமிப்பு வங்கிக் கணக்கின் கடைசி 4 இலக்கங்கள்>” என்ற வடிவத்தில் SMS அனுப்புவதன் மூலம் கடன் பெறுவதற்கான தகுதியைச் சரிபார்க்கவும்.
இந்தச் சேவைக்கு நீங்கள் தகுதியுள்ளவரா இல்லையா என்பதைத் தெரிவிக்கும் பதில் குறுஞ்செய்தி மூலம் வரும்.  
உங்களுக்கு கடன் வாங்கு தகுதி இருப்பது உறுதியானால், YONO செயலியில் உள்நுழையவும்.
'இப்போது கிடைக்கும்' (‘avail now’) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இந்த தெரிவுக்குள் உள்ள கடன் காலம் மற்றும் தொகையைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) ஒன்று வரும், அதை உள்ளிடவும்.
அதையடுத்து, கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.


ALSO READ | SBI Yono முக்கிய விதி: லாக்-இன் செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR