புதுடில்லி: கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த படியே பணம் சம்பாதிக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வணிக வாய்பு காத்திருக்கிறது. இதன் மூலம் நீங்கள் வீட்டில் அமர்ந்த படியே, மாதம் 60 ஆயிரம் ரூபாய் எளிதாக சம்பாதிக்கலாம். இந்த சிறந்த வாய்ப்பை நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) உங்களுக்கு வழங்குகிறது.
பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் உரிமம் (SBI ATM Franchise)
பாரத ஸ்டேட் வங்கியின் எஸ்பிஐ ஏடிஎம் பிரான்சைஸை எடுத்து எளிதாக சம்பாதிக்கலாம். வங்கியின் ஏடிஎம் மெஷின்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் நிறுவுவதில்லை. தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஏடிஎம் மெஷின்களுக்கு பிரான்சைஸ் உரிமையை எடுப்பதன் மூலம் நீங்களும் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.
ALSO READ | SBI Life: செப்.30 வரை உங்கள் பாலிஸியை அபராதமின்றி புதுப்பிக்க அரிய வாய்ப்பு..!!
எஸ்பிஐ ஏடிஎம் பிரான்சைஸ் உரிமையை பெறுவதற்கான நிபந்தனைகள்
1. எஸ்பிஐ ATM பிரான்சைஸ் உரிமையை பெற, உங்களிடம் 50-80 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
2. மற்ற ஏடிஎம்களிலிருந்து அதன் தூரம் 100 மீட்டராக இருக்க வேண்டும்.
3. ATM நிறுவுவதற்கான இடம் தரை தளத்திலும், மிக நன்றாக தெரியும் படியான இடத்திலும் இருக்க வேண்டும்.
4. 24 மணி நேர மின்சாரம் இருக்க வேண்டும், இது தவிர, 1 கிலோவாட் மின் இணைப்பும் அவசியம்.
5. ATM ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனை மேற்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
6. ஏடிஎம் உள்ள இடம் கான்கிரீட்டினால் ஆன கூரையை கொண்டதாக இருக்க வேண்டும்.
7. V-SAT நிறுவுவதற்கு ஏடிஎம் நிறுவப்படும் குடியிருப்பு அல்லது பகுதிக்கான நிர்வாகத்திடம் இருந்து நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ் தேவை.
ALSO READ | SBI Door Step Banking: இனி உங்கள் வீடு தேடி பணம் வரும்..!!
எஸ்பிஐ ஏடிஎம் உரிமம் பெற தேவையான ஆவணங்கள்
1. ஐடி சான்று - ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை
2. முகவரி சான்று - ரேஷன் கார்டு, மின்சார கட்டணம்
3. வங்கி கணக்கு விபரம் மற்றும் பாஸ்புக்
4. புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண்.
5. பிற ஆவணங்கள்
6. ஜிஎஸ்டி எண்
7. நிதி ஆவணங்கள்
ALSO READ | SBI வழங்கும் கொரோனா கடன்; குறைந்த வட்டியில் ₹5 லட்சம்; விண்ணபிப்பது எப்படி..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR