எஸ்பிஐ வீட்டுக் கடன் சலுகைகள்: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. எஸ்பிஐ மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கி அளித்த தகவலின்படி, கடன் வாங்கும் நபர் ஒரு பெண்ணாக இருந்தால், மற்ற சலுகைகளைத் தவிர, அவர் கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இந்த வீட்டுக் கடன் கிரெடிட் ஸ்கோருடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது உங்கள் கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், நீங்கள் அதிகக் கடன் வாங்கலாம்.


எஸ்பிஐ தகவல் அளித்துள்ளது
இது குறித்து எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் அளித்து, 'எஸ்பிஐ வீட்டுக் கடன் மூலம் உங்கள் கனவு வீட்டைப் பெறுங்கள். 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் கடன் பெறலாம். எஸ்பிஐ இன் வழக்கமான வீட்டுக் கடன்களில் ஃப்ளெக்ஸிபே, என்ஆர்ஐ வீட்டுக் கடன், சம்பளம் பெறாதவர்களுக்கான கடன், டிஃபரன்ஷியல் சலுகை, சிறப்புரிமை, ஷௌர்யா மற்றும் அப்னா கர் ஆகியவை அடங்கும்.’ என தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | UPI Payment Mistakes:இதை செய்யத் தவறினால் உங்கள் கணக்கு காலியாகிவிடும்


விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்ளுங்கள்
குடிமகன்: இந்தியர்
குறைந்தபட்ச வயது: 18 
அதிகபட்ச வயது: 70 
கடன் காலம்: 30 ஆண்டுகள்


புதிய வட்டி விகிதங்களை அறிந்து கொள்ளுங்கள்
பாரத ஸ்டேட் வங்கி 6.65 சதவீதம் என்ற ஆண்டு வீதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது.


என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
- இது குறைந்த வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது.
- அதன் செயலாக்கக் கட்டணம் குறைவு.
- மறைமுக கட்டணம் இல்லை
- இதற்கு ப்ரீபேமெண்ட் செலுத்த கட்டணம் இல்லை
- மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லை
- கடனை 30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம்
- இதன் கீழ், வீட்டுக் கடன் ஓவர் டிராஃப்ட் வடிவத்திலும் கிடைக்கிறது
- பெண் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் மேலும் குறைவாக இருக்கும்


மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு ஷாக்: விவரம் இதோ 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!