புதுடெல்லி: வங்கிக் கடன் மூலம் வீடுகளை வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி!! இவர்கள் விரைவில், வீட்டுக் கடன் இஎம்ஐகளுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டி வரலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஜூன் மாதத்தில் ரெப்போ விகிதத்தை குறைந்தபட்சம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) அறிக்கை தெரிவிக்கின்றது.
புதன்கிழமை (ஏப்ரல் 13) அன்று வெளியிடப்பட்ட SBI Ecowrap அறிக்கையில், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா 25 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) விகித உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (வட்டி விகித கடினப்படுத்துதல்) சுழற்சியில் 75 அடிப்படை புள்ளிகளின் ஒட்டுமொத்த விகித உயர்வு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரெப்போ விகிதம் என்பது வணிக வங்கிகளுக்கு தேவைப்படும் போது ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விகிதமாகும். ரெப்போ விகிதத்தை உயர்த்துவது கடன் வழங்குபவர்களை வீட்டுக் கடன்கள், கார் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் பிற வகையான முன்பணங்கள் மீதான வட்டி விகிதங்களை அதிகரிக்க அழுத்தம் கொடுக்கும். எனவே, நீங்கள் மிதக்கும் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனைப் பெற்றிருந்தால், உங்கள் வீட்டுக் கடனுக்கான அதிக வட்டி விகிதத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் செய்தி: HBA வட்டி விகிதங்களை குறைந்தது அரசு
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி பயன்படுத்தும் ஒரு கருவி இது. ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் இருந்து பெறும் கடன் விகிதமாகும்.
ரிசர்வ் வங்கி, கடந்த வாரம் அறிவித்த நிதிக் கொள்கையில், ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 4 சதவீதமாக வைத்துள்ளது. பணவீக்கம் இலக்குக்குள் இருப்பதை உறுதி செய்யவும், வளர்ச்சியை ஆதரிக்கவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இருப்பினும், அதிகரித்து வரும் பணவீக்கத்துடன், ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பது ரிசர்வ் வங்கிக்கு கடினமான சூழலை ஏற்படுத்தும். உதாரணமாக, சில்லறை பணவீக்கம் பிப்ரவரி 2022 இல் இருந்த 6.07 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் 2022 இல் ஆண்டு அடிப்படையில் 6.95 சதவீதமாக உயர்ந்தது. இது உணவுப் பொருட்களின் விலையில் கூர்மையான உயர்வு காரணமாக இருந்தது. சில்லறை பணவீக்கம் நுகர்வோர் விலை அடிப்படையிலான குறியீட்டால் (CPI) அளவிடப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் மோதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் பணவீக்க அளவுகளை உயர்த்தியுள்ளது. கோதுமை, புரதப் பொருட்கள் (குறிப்பாக கோழி), பால், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், உருளைக்கிழங்கு, மிளகாய், மண்ணெண்ணெய், விறகு, தங்கம் மற்றும் எல்பிஜி போன்ற உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் மீதான அழுத்தம் இந்தோனேசியாவில் இருந்து ஏற்றுமதி கொள்கையில் மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இது பாமாயில் இறக்குமதியை குறைக்க வழிவகுத்தது என அறிக்கை கூறுகிறது.
மேலும் படிக்க | Indian Railways: அப்பாடா, இனி டிக்கெட் முன்பதிவின் போது இதை செய்ய வேண்டாம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR