புதுடெல்லி: எல்பிஜி சிலிண்டருக்கு அரசு மானியம் வழங்குகிறது. நீங்கள் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தும்போது இந்த மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் உங்களிடம் மானியமில்லாத LPG சிலிண்டர் (LPG Cylinder) இருந்தால், உங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த மானியமும் கிடைக்காது. ஒரு வருடத்தில் 12 எல்பிஜி சிலிண்டர்களுக்கு அரசு மானியம் அளிக்கிறது. இந்த மானியத் தொகை ஒவ்வொரு மாதமும் மாறுபடும். குறிப்பிட்ட அளவைத் தாண்டி நீங்கள் சிலிண்டரை புக் செய்தால், அதை நீங்கள் சந்தை விலையில் அதாவது மானியம் இல்லாத விலையில் வாங்க வேண்டும்.


மானியமில்லாமலும் LPG -க்கு தள்ளுபடி கிடைக்கும்


மானியமில்லாமல் கூட நீங்கள் சிலிண்டர் விலையில் தள்ளுபடி பெறலாம். அரசாங்கம் உங்களுக்கு மானியம் வழங்காவிட்டாலும், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் (Indian Oil) மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் இத்தகைய வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் செலுத்தப்படும் கட்டணத்தில் தள்ளுபடியை வழங்குகின்றன.


டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் (Digital Payment) அராசாங்கத்தின் பிரச்சாரத்தை ஊக்குவிக்க இந்த தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக், உடனடி தள்ளுபடி, கூப்பன் போன்ற வழிகளில் இந்த தள்ளுபடியை வழங்குகின்றன.


தள்ளுபடியைப் பெற என்ன செய்ய வேண்டும்


நீங்கள் LPG சிலிண்டரை முன்பதிவு செய்யும் போதெல்லாம், அதன் கட்டணத்தை பணமாக செலுத்தாதீர்கள். சிலிண்டரை முன்பதிவு செய்த பின்னர் அதை வழங்க வந்த நபரிடம் பெரும்பாலான மக்கள் பணம் செலுத்தி விடுகிறார்கள்.


இப்படி செய்வதால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தள்ளுபடிகள் கிடைக்காமல் போய்விடுகின்றன. தள்ளுபடியை பெற கண்டிப்பாக டிஜிட்டல் முறையில் கட்டணத்தை செலுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.


ALSO READ: SBI வாடிக்கையாளரா நீங்கள்... உடனே இதை செய்யுங்கள்; இல்லையெனில் கணக்கு முடக்கபடும்..!


இந்த வழியில் டிஜிட்டல் கட்டணத்தை செலுத்தலாம்


LPG சிலிண்டர் முன்பதிவுக்குப் பிறகு, கட்டணம் செலுத்தும்போது, ​​Paytm, PhonePe, UPI, BHIM, Google Pay, Mobikwik போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் பணம் செலுத்துங்கள். இப்படி செய்தால் எண்ணெய் நிறுவனங்கள் உங்களுக்கு தள்ளுபடி அளிக்கின்றன. முதல் முறையாக LPG முன்பதிவு மற்றும் கட்டணம் செலுத்தும்போது வாடிக்கையாளர்களுக்கும் நல்ல கேஷ்பேக்கும் கிடைக்கிறது. இது தவிர, ஆன்லைன் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணைய வங்கி, மொபைல் வங்கி மூலமாகவும் இந்த தள்ளுபடியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


LPG சிலிண்டர்களின் விலை


நவம்பர் 1 முதல் முன்பதிவு விதிகளும் விலைகளும் திருத்தப்பட்டுள்ளன. ஜூன், ஜூலை மாதங்களை தவிர்த்து, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் LPG-யின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நவம்பர் 1 முதலும் விலைகள் மாற்றப்படவில்லை.


நான்கு நகரங்களில் இந்தேனின் (Indane) மானியமில்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


நகரம் நவம்பர் அக்டோபர்
தில்லி 594 594
கொல்கத்தா 620.50 620.50
மும்பை 594 594
சென்னை 610 610

ALSO READ: BSNL-ன் இந்த பம்பர் பிளானில் எக்கச்சக்க offers: Miss பண்ணிடாதீங்க


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR