இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு சுலபமான வழிகளைத் தேர்தெடுக்கும் வகையில் கூகுள் மேப்பில் பைக் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புதிதாக செல்பவருக்கு கை கொடுக்கும் சாதனமாக கூகுள் மேப்ஸ் விளங்குகிறது. ஆனால் இந்த சேவை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சேவையில் தனிப் பிரிவு இல்லாமல் இருந்து வந்தது.


இந்நிலையில் கூகுள் மேப்பில் பைக் ஓட்டுபவர்களுக்கு என பிரத்யேகமான புதிய வசதி நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே முதன் முறையாக இந்தியாவில் இந்த சேவை அறிமுகமாகியுள்ளது. வழக்கமான சேவை போன்று இதிலும் குரல் வழி வழிகாட்டும் சேவையும் உள்ளது.