இன்றைய இளைஞர்கள் ஒரு நாளின் பாதி நேரத்தை இணையத்தில் செலவிடுகிறார்கள்.  இளையத்தில் ஏதேனும் ஒன்றை ‘தேடிக்’ கொண்டே இருக்கிறார்கள். எந்த வகையான தகவல் வேண்டும் என்றாலும், நம்மை ஏமாற்றாமல் உடனடியாக கூகுள் நமக்கு தகவல்களை அள்ளி வழங்குகிறது. அந்த வகையில், ஆண்களை விட பெண்களே அதிக நேரம் இணையத்தில் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள் என்ற தகவல் ஆச்சர்யம் அளிக்கிறது அல்லாவா.. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண்கள் அப்படி என்ன தான் கூகுளில் தேடுகிறார்கள் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பெண்களை பொறுத்தவரை இதயத்தில் காதல் உணர்வு இருந்தால், பெண்கள் கூகுளைப் பயன்படுத்தி காதல் கவிதைகளைப் படிக்கவும் அல்லது அதைத் தங்கள் துணைக்கு அனுப்பவும் செய்கிறார்கள் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இது தவிர உடல் பருமன் குறைப்பது குறித்த டிப்ஸை தேடுகிறார்கள். அதே போன்று, வேலை தொடர்பான தகவல்களை கூகுளில் பெண்கள் தேடுகின்றனர் என்கிறது ஆய்வு


2 கோடி பெண்கள் ஆன்லைனில் ஆக்டிவ் ஆக உள்ளனர்


நாட்டில் உள்ள மொத்த 150 மில்லியன் இணைய பயனர்களில், இந்தியாவில் சுமார் 20 மில்லியன் பெண்கள் ஆன்லைனில் ஆக்டிவ் ஆக உள்ளனர் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் 75 சதவீத பெண்கள் 15-34 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில், 31 சதவீத டீனேஜர்கள் உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமாக இருக்க என்ன வழி என்பதைப் பற்றி இணையத்தில் தேடுகிறார்கள். இது தவிர, 17 சதவீதம் பேர் செக்ஸ், மனச்சோர்வு மருந்துகள் போன்றவற்றைப் பற்றி அதிகம் தேடுகிறார்கள். பெண்கள் இணையத்தில் எதைத் தேடுகிறார்கள் என்பதை அறிவது சுவாரஸ்யமானது.


ALSO READ | Flipkart Offer; வெறும் ரூ.99க்கு Realme ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு


பெண்கள் கூகுளில் அதிகம்  தேடும் விஷயங்கள்


- சிறுவயதில் இருந்தே தொழிலில் லட்சியமாக இருக்கும்  பெண்கள், இது தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுகிறார்கள். அவர்கள் எந்த வகை தொழிலை செய்யலாம் அல்லது எந்த விதமான படிப்பு நல்ல வாய்ப்புகளை கொடுக்கும் என தேடுகிறார்கள். 


- அதுமட்டுமல்லாமல், தங்கள் அழகுக்காக புதுப்புது டிப்ஸ்களைக் கடைப்பிடிக்க கூகுள் உதவியை நாடுகிறார்கள். பல பெண்கள், தங்களை அழகாக வைத்துக் கொள்ள இணையத்தில் பலவிதமான ஆராய்ச்சிகளைப் படிக்கிறார்கள்.


- பல பெண்களும் தங்கள் உடல்  பருமனை குறைக்க டிப்ஸ்களை தேடுகிறார்கள். அதற்கான உணவு பழக்கங்கள், பயிற்சி குறித்த தகவல்களை அதிகம் தேடுகிறார்கள்


- பல பெண்களும் கூந்தல் விஷயத்தில் மிகவும் அக்கறை காட்டுவதை பார்த்திருக்கலாம். தனது தலைமுடியை எவ்வாறு வெட்டிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று இணையத்தில் தேடுகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இதை ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | Flipkart Sale: ரூ.70,999 ஸ்மார்ட் டிவி-ஐ வெறும் ரூ. 25,186-க்கு வாங்க சூப்பர் வாய்ப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR