கூகுள் அஸிஸ்டண்ட் அம்சத்தில் அதிகமானோர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு கூகுள் நிறுவனம் பதில் கேள்வி கொடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூகுள் அஸிஸ்டெண்ட், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களில் தகவல்களை பெறுவதற்கும் சிலர் கூகுள் அஸிஸ்டெண்ட் குரலை பயன்படுத்துவர். இந்த கூகுள் அஸிஸ்டெண்ட் குரலை பெரும்பான்மை மக்கள் தாறுமாறாக கேள்விகளை கேட்கின்றனர். இதில், பலரும் கேட்பது ஒரே கேள்விதான். ”கூகுள் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?” என்பதே.


கல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் இருக்கும் கடுப்பில் இப்படி கேட்கிறார்களா? அல்லது விளையாட்டாக கேட்கிறார்களா? என்பது தெரியாமல் கூகுள் தற்போது மேற்கண்ட கேள்விக்கு பதில் கேள்வியை எழுப்பியுள்ளது. அந்த பதில் கேள்வி என்னவென்றால்,


“எங்களுக்கு உண்மையாக... உண்மையாக... உண்மையாக................ தெரியவேண்டும் ஏன் கூகுள் அஸிஸ்டெண்டிடம் நீங்கள் திருமணம் செய்து கொள்ள கேட்கிறீர்கள்?” என்று கூகுள் நிறுவனத்தின் இந்திய தலைமை டிவிட் செய்துள்ளது. கூகுளின் இந்த டிவீட்டிற்கு இளைஞர்கள் பலரும் கிண்டல் அடித்து ரீ-டிவீட் செய்து வருகின்றனர்.