தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பாஜக வேட்பாளர் 2 ஆயிரம் கிலோ இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுத்துளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை வடக்கு பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக பதவி வகிப்பவர் கோபால் ஷெட்டி. இவர் பாஜக கட்சியை சேர்ந்தவர். இவரோடு இவரது தொகுதியில் இவரை எதிர்த்து பிரபல நடிகை ஊர்மிளா மட்டோன்கர் களமிறங்கியுள்ளார். 


அந்தவகையில் சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் நாடு முழுவதும் பாஜக 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்றும் என வெளியாகிவரும் தகவல்கள் பாஜகவினருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் மும்பை வடக்கு பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் 2 ஆயிரம் கிலோ இனிப்பு வகைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.