கொரோனா தொற்றுநோய் காரணமாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட லாக்டௌனில் (Lockdown) தளர்வுகள் ஏற்பட்ட பின்னர், பொருளாதாரத்தில் பல்வேறு துறைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பண்டிகை காலங்களில் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பை மனதில் கொண்டு, அவசரகால கடன் வரி உத்தரவாத திட்டத்தை (ECLGS) ஒரு மாதத்திற்கு, அதாவது நவம்பர் 30, 2020 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தத் திட்டத்தை 2020 நவம்பர் 30 வரை அல்லது மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒப்புதல் பெறும் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் விரிவாக்கப்படுவதால், கடன் பெற விரும்பி, ஆனால் இதுவரை இந்த திட்டம் மூலம் கடனுக்கு விண்னப்பிக்காதவர்கள் பயனடைவார்கள்.


ALSO READ: BoB-யை தொடர்ந்து ICICI-யிலும் பணம் டெபாசிட் செய்யவும், எடுக்கவும் இனி கட்டணம்..!


ECLGS திட்டத்தின் அறிவிப்பு, MSME, வணிக நிறுவனங்கள், வணிகத்திற்காக தனிபட்ட அல்லது முத்ரா கடன்கள் (Mudra Loan) வாங்குபவர்கள் ஆகியோருக்கு 2020 பிப்ரவரி 20-வரை நிலுவையில் உள்ள கடனில் 20% வரம்பு வரை, முழு அளவிலான உத்தரவாதம் நிறைந்த மற்றும் கொலாட்ரல் ஃப்ரீ கடனை வழங்க ஆத்மநிர்பர் பாரத் தொகுப்பின் (ANBP) ஒரு பகுதியாக செய்யப்பட்டது.


2020 பிப்ரவரி 29 வரை ரூ .50 கோடி வரை நிலுவையில் உள்ள கடனாளர்களும், ரூ .250 கோடி விற்றுமுதல் கொண்டவர்களும் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள்.


இந்த திட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வட்டி விகிதங்கள் 9.25 சதவீதமாகவும், NBFC-க்கு 14 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கடன் வழங்கும் உறுப்பினர் நிறுவனங்கள் மூலம் ஈ.சி.எல்.ஜி.எஸ் போர்ட்டலில் பதிவேற்றிய தரவுகளின்படி, இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 60.67 லட்சம் கடன் வாங்குபவர்களுக்கு ரூ .2.03 லட்சம் கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 1.48 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


ALSO READ: Union Bank வழங்கும் அற்புத offers: Home loan rates குறைந்தன, செயலாக்கக் கட்டணம் இல்லை!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR