சென்னை, லக்னோ உள்ளிட்ட நாட்டின் பல விமான நிலையங்களில் பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின்  தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அந்த வகையில் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களை பயங்கரவாதிகள் குறிவைத்து இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் எச்சரித்துள்ளன.


இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, லக்னோ உள்ளிட்ட விமான நிலையங்களில் பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.