குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான அப்டேட்!..எல்பிஜி விலை விரைவில் குறையும்
LPG Price Updates: புத்தாண்டில் அரசு நல்ல செய்தி கொடுக்கப் போகிறது. LPG சிலிண்டர் விலையில் பெரும் குறைப்பு இருக்கலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.
LPG Price: கடந்த 2 ஆண்டுகளாக தொடர் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு புத்தாண்டில் நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு எல்பிஜி விலையில் மக்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். அதாவது எல்பிஜி சிலிண்டர்களின் விலை அதிரடியாக குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1056 ஆக உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், புத்தாண்டில், எல்பிஜி விலையில் அரசு பெரிய தள்ளுபடியை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், புத்தாண்டு தொடக்கத்தில், இந்த செய்தி மக்களுக்கு மிகவும் நிம்மதியாக இருக்கும்.
எல்பிஜி சிலிண்டர் விலை குறையவில்லை
சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக, இந்தியாவிலும் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலைகள் ஏறி இறங்குகின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயு விலையை நிர்ணயிக்கும் உரிமையை அரசு, தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு (Oil Marketing Companies) வழங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் ஜூலை 6, 2022 முதல் எல்பிஜி விலையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இதே காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை 30 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, நிறுவனங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவை மிக மலிவாக வாங்கி, மக்களுக்கு விலை உயர்ந்த விலையில் விற்கின்றன.
மேலும் படிக்க | 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் - அதிரடி அறிவிப்பு
சர்வதேச சந்தையில் 30% குறைப்பு
அக்டோபர் 2022-ல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு $85 ஆக இருந்தது. அப்போது, நாட்டில் எல்பிஜி சிலிண்டர் ரூ.899-க்கு கிடைத்தது. அதன் பின்னர் தற்போது வரை இந்த விலையை சுமார் 150 ரூபாய் வரை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 83 டாலராக குறைந்துள்ளது. அதாவது, 2021 அக்டோபரில் இருந்தும் எண்ணெய் விலை குறைந்துள்ளது. அதன்படி, புத்தாண்டில் எல்பிஜி சிலிண்டர்கள் மீது ரூ.150 வரை குறைக்கப்படும் என நம்பப்படுகிறது.
ராஜஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு
அடுத்த ஆண்டு ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கெலாட் அரசு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1, 2023 முதல், ராஜஸ்தானில் உள்ள மக்களுக்கு வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் ரூ.500க்கு (எல்பிஜி விலை) கிடைக்கும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் எல்பிஜி சிலிண்டரின் தற்போதைய விலை ரூ.1056 ஆக உள்ளது.
தற்போது எல்பிஜி சிலிண்டர்கள் மும்பையில் ரூ.1052.50-க்கும், கொல்கத்தாவில் ரூ.1079-க்கும், டெல்லியில் ரூ.1053-க்கும், பாட்னாவில் ரூ.1151-க்கும், லக்னோவில் ரூ.1090-க்கும், சென்னையில் ரூ.1068-க்கும் கிடைக்கிறது.
மேலும் படிக்க | புத்தாண்டில் நிம்மதி அளிக்கும் செய்தி! LPG விலை குறைய வாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ