இந்த திட்டத்தின் மூலம் ரூ. 50 ஆயிரம் கிடைக்கும்... மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!
ரூ. 50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் இந்திரா காந்தி நகர்ப்புற கடன் அட்டை திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்து ராஜஸ்தான் அரசு அறிவித்தது.
மத்திய, மாநில அரசுகளால் பொது மக்களுக்காகப் பல சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இப்போது மாநில அரசு மற்றொரு திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
ராஜஸ்தான் அரசு தனது லட்சியத் திட்டமான இந்திரா காந்தி நகர்ப்புற கடன் அட்டை திட்டத்தின் காலக்கெடுவை இந்த நிதியாண்டு இறுதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இத்துடன், இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பும் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
காலக்கெடு நீட்டிப்பு
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, முதலமைச்சர் அசோக் கெலாட், நகர்ப்புற தெருவோர வியாபாரிகள் மற்றும் சேவைத் துறை இளைஞர்கள் மற்றும் வேலையில்லாதவர்களை சுயவேலைவாய்ப்புடன் இணைக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார். இந்திரா காந்தி நகர்ப்புற கடன் அட்டை திட்டத்தின் காலத்தை அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பும் நீட்டிப்பு
முன்னதாக, இந்திரா காந்தி நகர்ப்புற கடன் அட்டை திட்டம் இந்தாண்டு மார்ச் 31 வரை இருந்தது. இதனுடன், திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 40 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்தப்பட்டு, நகர்ப்புறங்களில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட ஏழைகளும் இத்திட்டத்தின் பலனைப் பெற முடியும்.
வட்டியில்லா கடன்
இந்திரா காந்தி நகர்ப்புற கடன் அட்டை திட்டம் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. வாழ்வாதாரம் மற்றும் சுயவேலைவாய்ப்புக்கு எந்த உத்திரவாதமும் இல்லாமல் வேலையில்லாத இளைஞர்களுக்கு தெருவோர வியாபாரிகள், ரிக்ஷாக்காரர்கள், குயவர்கள், தையல்காரர்கள், துணி துவைப்பவர்கள், மெக்கானிக்குகள், பெயிண்டர்கள் ஆகிய பணிகளின் மூலம் பொருளாதார ஆதரவை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் படிக்க | வந்தே பாரத் முதல் ராஜதானி வரை... இந்தியாவில் ஓடும் அதிவேக ரயில்கள் - முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ