Rajasthan Politics: ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மீண்டும் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றியுள்ளனர். இது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியங்களையும் பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. இருவருக்கும் இடையே பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதா என்று பலரும் வியப்படைகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா (Bharat Jodo Yatra) விரைவில் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தானை அடைய உள்ளது. யாத்திரை மாநிலத்திற்கு வருவதற்கு முன்னதாக, ராஜஸ்தான் காங்கிரஸின் முக்கியமான கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஆனால் இந்த சந்திப்பின் உண்மையான நோக்கம் வேறு என்றும் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் ராஜஸ்தான் பயணத்திற்கு முன், காங்கிரஸ் கட்சியில் ஒரு நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளதாக, இந்த புகைப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் ஆசுவாசம் ஏற்படுகிறது. இந்தியாவை ஒன்றிணைக்கும் பாரத் ஜோடா யாத்ராவின் நோக்கம் நிறைவேறுவது ஒருபக்கம் இருக்கட்டும், முதலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி பூசல்களை மறந்து ஒன்றாக இணைய வேண்டும் என்று ஊடகங்கள் முதல் அரசியல் களம் வரை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் விவகாரத்தைப் பற்றி தொடர்ந்து பேசி வந்தனர்.
இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஒற்றை பதிலாக அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் ஒன்றாகக் காணப்பட்ட ஒரு படம் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | மயான டீக்கடை! 26 கல்லறைகளுக்கு நடுவில் கல்லா கட்டும் டீக்கடை
கெஹ்லாட்-பைலட் இணைப்புக்கு காரணமான பாரத் ஜோடோ யாத்திரை
பாரத் ஜோடோ யாத்திரைக்கான ஏற்பாடுகள் தொடர்பான ராஜஸ்தான் காங்கிரஸ் கூட்டத்தில், கே.சி.வேணுகோபால் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருடன் சச்சின் பைலட்டும் கலந்து கொண்டார். ராஜஸ்தான் காங்கிரசின் உட்பூசல்கள் எல்லாம் சரியாகிவிட்டதாக அந்தச் சந்திப்பின் படங்களைப் பார்த்தபோது தோன்றியது. இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய இரு தலைவர்களும், கட்சியின் ஒற்றுமையை வலுவாகக் கூறி, ராகுல் காந்தியின் பயணத்தை வெற்றியடையச் செய்வோம் என்று தெரிவித்தனர்.
பாரத் ஜோடோ யாத்திரையை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் காங்கிரசில் நடந்து வரும் அரசியல் சலசலப்பு முடிவுக்கு வந்துள்ளது அல்லது தற்போதைக்கு சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவரும் கட்சியின் பாரம்பரியத்தை கடைபிடிப்பவர்கள் என்றும், இருவருமே கட்சிக்கு முக்கியமானவர்கள் என்று, தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்தியுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | அமேதியில போட்டிப் போடறதைப் பத்தி இப்ப என்ன பேச்சு? கடுப்படிக்கும் ராகுல் காந்தி
முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையேயான ஒற்றுமையான புகைப்படத்திற்கு பிறகு, தற்போது பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று நம்பப்படுகிறது. இருப்பினும், ஆலோசனைக்குப் பிறகு, தலைவர்கள் கூறிய கருத்துகள் குறித்து பிசிசி தலைவரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் கே.சி.வேணுகோபால் கூறினார்.
அசோக் கெலாட்டின் மந்திரம் மீண்டும் வேலை செய்ததா?
அசோக் கெலாட்டின் மந்திரம் மீண்டும் ஒரு முறை வேலை செய்யத் தொடங்கிவிட்டதா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஏனென்றால் கடந்த வாரம் அவர் சச்சின் பைலட்டை துரோகி என்று அழைத்தார், இப்போது அவருடன் ஒரே மேடைக்கு வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸின் உட்கட்சிப்பூசல், காங்கிரஸ் கட்சியின் உயர் தலைமைக்கு சவால் விடுத்த நிலையில், தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இவை அனைத்தும் அசோக் கெலாட்டின் தந்திரமான அரசியல் மந்திரம் செய்யும் வேலை என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | உறைய வைக்கும் குளிரிலும் நீர் விளையாட்டில் உச்சம் தொடும் காஷ்மீரி வீராங்கனைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ