Chana Dal For Subsidy: விலைவாசி உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பருப்பு வகைகளை மலிவான விலையில் வழங்குவதற்காக, 'பாரத் தால்' திட்டத்தினஅ கீழ், ஒரு கிலோ கடலை பருப்பை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கினார். டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் உள்ள தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (NAFED) சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் கடலை பருப்பு மலிவு விலையில் விற்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டிராக்டர் அச்சிடப்பட்ட அரிய ‘5’ ரூபாய் நோட்டு இருக்கா.. லட்சங்களை அள்ளலாம்!


எங்கெல்லாம் பருப்பு கிடைக்கும்?


இது NCCF, Kendriya Bhandar மற்றும் மதர் டெய்ரியின் Safal-இன் சில்லறை விற்பனைக் கடைகளிலும் கடலை பருப்பு மலிவு விலையில் கிடைக்கும். அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பியுஷ் கோயல் 'பாரத் தால்' என்ற பிராண்டின் கீழ், ஒரு கிலோ மூட்டைக்கு 60 ரூபாய் என்ற விகிதத்தில் கடலை பருப்பின் விற்பனையை தொடங்கியுள்ளார். 


இது தவிர, மானிய விலையில் 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை, ஒரு கிலோ ரூ.55 என்ற விலையில் கடலை பருப்பு வழங்கப்படும். 'பாரத் தால்' அறிமுகமானது, அரசாங்கத்தின் கையிருப்பு பருப்புகளை, சனாப் பருப்பாக மாற்றுவதன் மூலம் நுகர்வோருக்கு மலிவு விலையில் பருப்பு வகைகள் கிடைக்க மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கையாகும். துவரம் பருப்பின் சில்லறை விலை கடுமையாக உயர்ந்துள்ள நேரத்தில், சனா பருப்பை மானிய விலையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


பருப்பு பேக்கேஜிங்


தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள NCCF, Kendriya Bhandar மற்றும் Safal ஆகியவற்றின் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் விற்பனை மையங்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இந்த ஏற்பாட்டின் கீழ், மாநில அரசுகளின் நலத் திட்டங்களுக்காகவும், காவல்துறை, சிறைச்சாலைகளின் கீழ் வழங்குவதற்காகவும், நுகர்வோர் கூட்டுறவுக் கடைகள் மூலம் விநியோகிக்கவும் கடலை பருப்பு கிடைக்கிறது. 


மக்களுக்கு ஆரோக்கியமானது


அறிக்கையின்படி, இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பருப்பு வகை, கடலை பருப்பு. இது நாட்டில் பல வடிவங்களில் உட்கொள்ளப்படுகிறது. இந்த பருப்பில் பல ஊட்டச்சத்து ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி, செலினியம் பீட்டா கரோட்டின் மற்றும் கோலின் ஆகியவை மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொண்டுள்ளது. ரத்த சோகை, ரத்த சர்க்கரை, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் மன ஆரோக்கியத்திற்கும் கூட அவசியம்.


மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்க திட்டமா... EMI சுமையை குறைக்க சில டிப்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ