எகிறும் உடல் எடையை பட்டுனு குறைக்க உதவும் பச்சை உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க
Weight Loss Tips: உடல் பருமனை குறைப்பதில் அலட்சியம் காட்டாமல், உடலில் சேரும் கொழுப்பை விரைவில் குறைக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம்.
Weight Loss Tips: உடல் பருமனால் தொல்லையா? தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துகிறதா? இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டுமில்லை. இன்றைய உலகில் உடல் பருமன் என்பது பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதை சரி செய்ய மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்கிறார்கள், பல வித கடினமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால், இவற்றுக்கு மத்தியில் சில அடிப்படை விஷயங்களை மறந்து விடுகிறார்கள். உடல் எடையை குறைக்க நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படக்கூடாது.
உடல் பருமன் என்பது ஒரு நீண்ட கால சிக்கலான நோய் போன்றது. இது ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது. இதன் காரணமாக, டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய், சில வகையான புற்றுநோய்கள், எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படுகின்றன. ஆகையால், உடல் பருமனை குறைப்பதில் அலட்சியம் காட்டாமல், உடலில் சேரும் கொழுப்பை விரைவில் குறைக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம்.
உடல் பருமனில் இருந்து விடுபட, உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் பருமனை தடுத்து உடல் எடையை குறைக்கும் (Weight Loss) உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும். தொப்பை கொழுப்பைக் (Belly Fat) குறைக்க இது மிகவும் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியாக பார்க்கப்படுகின்றது. இயற்கையான வழியில் எடையை குறைகக் முயற்சிக்கும் போது பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கும். தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் இயற்கையான எளிய உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
பச்சை மிளகாய்
பச்சை மிளகாயை (Green Chilli) சாப்பிடுவது உடல் பருமனை குறைக்க உதவும் என பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. ஆகையால், தினமும் 2-3 பச்சை மிளகாய் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | Acidity Problem: வாயுத்தொல்லையா? இந்த உணவுகள் பக்கமே போகாதீங்க!!
பச்சை பயறு
பச்சை பயறில் (Green Gram) வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை உள்ளன. இது மட்டுமின்றி இதில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகியவையும் அதிக அளவில் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக இதை உட்கொள்வதால் வயிற்றில் நிரம்பிய உணர்வு இருக்கின்றது. மேலும் இதன் காரணமாக நாம் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கபப்டுகின்றது. இந்த வகையில் இது உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
ஏலக்காய்
ஏலக்காய் (Cardamom) சாப்பிடுவது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், ஏலக்காய் செரிமானத்திற்கும் மிகவும் உதவியாக இருக்கும். ஆகையால், உடல் எடையை குறைக்க நினைபவர்கள் ஏலக்காயை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் (Curry Leaves) ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் உடல் பருமனை தடுக்கும் பண்புகள் உள்ளன. கறிவேப்பிலை எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல், உடலில் உள்ள நச்சுகளையும் நீக்குகிறது.
கிரீன் டீ
கிரீன் டீ (Green Tea) உடல் எடையை குறைக்கும் ஒரு மிக பிரபலமான பானம். இதை உட்கொள்வதால் நேரடியாக எடை இழப்பு ஏற்படாது என்றாலும், இது கொழுப்பை எரிப்பதில் திறம்பட செயல்படுகிறது. தினமும் கிரீன் டீ குடிப்பதால், வளர்சிதை மாற்றம் அதிகரித்து, அவ்வப்போது பசி எடுப்பது குறைகிறது. இதை உட்கொள்வதால் தொப்பை கொழுப்பு குறைந்து, கலோரிகள் விரைவாக எரிக்கப்பட்டு உடல் எடையும் வேகமாக குறைகின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? கூடுமா? பதில் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ