யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கவே கூடாது தெரியுமா? உஷாராக இருக்கவும்
green tea : யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக்கூடாது என தெரிந்து கொள்ளுங்கள், இல்லையென்றால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
காலையில் எழுந்ததும் டீ குடிப்பது, ஒரு பாரம்பரியமாகவே மாறிவிட்ட நிலையில் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறிந்து தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது. டீ, காபி குடிப்பது என்பது எல்லோருக்கும் ஏற்றதாக இருக்காது. இஞ்சி டீ, கிரீன் டீ என வகைவகையான தேநீர்கள் இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் நன்மைகளைப் போலவே தீமைகளும் இருக்கின்றன. பொதுவாக கிரீன் டீ குடிப்பதால் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் குறித்து அடிக்கடி பட்டியலிடப்படுவதை நீங்களும் கவனித்திருப்பீர்கள். உண்மையில் கிரீன் டி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது தான். ஏனெனில் இது நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்துகிறது.
அதேநேரத்தில் கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும். எதையும் அதிகமாகக் குடிப்பது எப்படி நல்லதல்ல, அதேபோல க்ரீன் டீயை அதிகமாகக் குடிப்பது ஆரோக்கியத்துக்குக் கேடு.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பு கரைய, உடல் பருமன் உடனே குறைய.... காலையில் இதை செய்தால் போதும்
கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
கிரீன் டீயின் நன்மைகள் மிக முக்கியமாக சொல்லப்படுவது என்னவென்றால், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் சிறந்தது. தொப்பை இருப்பவர்கள் கிரீன் டீயை குடித்தால் உடல் எடை குறையும் எனவும் சொல்லப்படுகிறது. இதில் பாலிஃபீனால்கள், கேட்டசின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை உடலுக்கு நன்மை பயக்கும். க்ரீன் டீ உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது, தொப்பை மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பை எளிதாகக் கரைக்கிறது மற்றும் புற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
யார் கிரீன் டீ குடிக்கக் கூடாது
ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக்கூடாது என விளக்கமளித்துள்ளார். அதன்படி, கிரீன் டீயை அதிகமாக உட்கொண்ட பிறகு சிலருக்கு கல்லீரல் பிரச்சனைகள் வரலாம் என பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. க்ரீன் டீயில் உள்ள கேடசின்கள், குறிப்பாக EGCG (Epigallocatechin Gallate) கல்லீரலை பாதிக்கலாம். இந்த உறுப்பு தொடர்பான நோய்கள் ஏற்கனவே உள்ளவர்களுக்கு இது முக்கியமாக தீங்கு விளைவிக்கும். எனவே கிரீன் டீயை அதிகமாக குடிக்காதீர்கள். கல்லீரல் நோய் இருப்பவர்கள் கிரீன் டீ குடிப்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை ஒட்ட விரட்ட.. டயட்டிலும் வாழ்விலும் இந்த மாற்றங்களை செய்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ