லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் வரதட்சணை வேண்டி திருமணம் செய்ய மறுத்து மணமகனுக்கு மொட்டை அடித்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் மங்கள் சிங். தனக்கு வரதட்சணையாக மோட்டார் சைக்கில், தங்கச் சங்கிளி கொடுத்தால் தான் மணப்பெண்னின் கழுத்தில் தாலி கட்டுவேன் என தெரிவித்து திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இவருக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மொட்டை அடித்துள்ளனர்


இதுகுறித்து பாதிக்கப்பட்ட மணப்பெண்ணின் பாட்டி தெரிவிக்கையில்... திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே மணமகன் இந்த கோரிக்கையினை வைத்ததாகவும், தங்களால் அளிக்க முடியாது என தெரிவித்ததும் திருமணத்தை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மணமகனின் தலையினை அரைகுறையாக மொட்டை அடித்தது யார் என தங்களுக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், ஜார்கண்ட் பகுதியில் வரதட்சணை மறுப்பால் திருமணம் செய்த 2 மணி நேரத்தில் விவாகரத்து கோரிய மணமகன் மற்றும் அவரது தந்தை இருவருக்கும் மொட்டை அடித்தது குறிப்பிடத்தக்கது.


வரதட்சணை கேட்பது மட்டும் அல்ல கொடுப்பதும் குற்றமே!