26 சக்கரங்கள், 100 அடி நீளம், இருபுறமும் இருந்து இயக்கலாம் அது என்ன? என விடுகதை சொன்னால் நம்மில் பெரும்பாலானோர் அது ரயில் என பதிலளிப்பார்கள். ஆனால், ரயிலில் கூட இல்லாத நீச்சல் குளம், ஜக்குஸி, குளியல் தொட்டி, மினி-கோல்ப் மைதானம், ஹெலிபேட் உள்ளிட்ட சகல வசதிகளுடன் ஒரு கார் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம்,  டிவிகள், ஃபிரிட்ஜ்கள் என ஐந்து நட்சத்திர விடுதிக்கு இணையான கார் ஒன்று மறு சீரமைப்பு செய்யப்பட்டு அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவை சேர்ந்த ஜே ஓர்பெர்க் என்பவர் 60 அடி நீளமுடைய  'அமெரிக்கன் டிரீம் கார்' என பெயரிடப்பட்ட காரை 1980-களில் உருவாக்கினார். குட்டி ரயிலை போல் தோற்றம் கொண்ட அந்த கார் உலகின் மிக நீளமான காராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. லிமோ ரகத்தை சேர்ந்த இந்த காரின் முன் மற்றும் பின் புறத்தில் V8 இன்ஜின் பொருத்தப்பட்டன. இதனால் காரை முன் மற்றும் பின் ஒரு பக்கங்களில் இருந்தும் இயக்க முடியும். சிறிது காலம் கழித்து இந்த கார் 100 அடி நீளம் கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டது. பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய அமெரிக்கன் டிரீம்  கார் ஒருகட்டத்தில் கைவிடப்பட்டு பரிதாபகரமான நிலைக்கு சென்றது. ஒழுங்கான பராமரிப்பு இல்லாததால் சக்கரங்கள், காரின் ஜன்னல்கள் கடும் சேதமடைந்தன.


மேலும் படிக்க | Guinness Records: 1360 கிமீ பயணத்தை ஒரே பயணத்தில் முடித்த டொயோட்டா Mirai



இந்நிலையில் மேனிங் என்பவர் பிரபல இணைய வழி வர்த்தக இணையதளமான eBay மூலமாக இதனை விலைக்கு வாங்கினார். ஆனால் சில மாதங்களிலேயே இதனை மீண்டும் விற்பனை செய்ய மேனிங் முயன்றார். அவரிடம் இருந்து புளோரிடாவில் உள்ள டெசர்லாண்ட் பார்க் கார் அருங்காட்சியகத்தின் உரிமையாளரான மைக்கேல் டெசர் 'அமெரிக்கன் டிரீம் கார்'-ஐ வாங்கினார். புளோரிடாவில் இருந்து 2 பாகங்களாக பிரிக்கப்பட்டு இந்த கார் ஓர்லாண்டாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் இதன் பெயர்  'அமெரிக்கன் டிரீம் கார்' என்பதில் இருந்து 'சூப்பர் லிமோசின்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 



பழுதடைந்த இதனை மீண்டும் சீரமைக்கும் முயற்சியில் இறங்கிய டெசர், 100 அடி நீளம் கொண்ட இந்த காரின் நீளத்தை 100 அடி மற்றும் 1.50 அங்குலமாக அதிகரித்தார். இதன் மூலம் உலகின் மிக நீளமான கார் எனும் சாதனையை தனக்கு தானே முறியடித்துள்ளது  'சூப்பர் லிமோசின்'. இந்த காரை சீரமைக்க இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது. 



26 சக்கரங்களை  கொண்டுள்ள இந்த நீளமான காரை இருபுறமும் இருந்து இயக்க முடியும். நீச்சல் குளம், ஜக்குஸி, குளியல் தொட்டி, மினி-கோல்ப் மைதானம் மற்றும் ஒரு ஹெலிபேட் கூட இந்த காரில் இடம் பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்ய முடியும். இந்த கார் சினிமாவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. தனிப்பட்ட உபயோகத்திற்காக ஒரு மணி நேரத்திற்கு 50 டாலர் முதல் 200 டாலர் வரை கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | கின்னஸ் சாதனை:நீருக்கடியில் 2.17 நிமிடத்தில், ரூபிக் க்யூபை ஒழுங்குபடுத்தி சாதனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR