இன்று (22 பிப்ரவரி 2022) குரு பகவான் பிருஹஸ்பதி கும்ப ராசியில் அஸ்தமிக்கிறார். மறுபுறம், சூரிய பகவான் மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்குள் நுழைவார். கும்ப ராசியில் சூரியன் மற்றும் வியாழன் இணைவு 12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது. முன்னதாக, கும்ப ராசியில் வியாழன் மற்றும் சனியின் இணைப்பு இருந்தது. வியாழன் கிரகம் குரு என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகங்கள் தனுசு மற்றும் மீனத்தை ஆளும் கிரகங்கள். குரு அறிவு, கல்வி, தொண்டு, அறம் மற்றும் சமயப் பணிகளின் முகவராகக் கருதப்படுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த கிரகத்தின் அருள் யாரிடம் பொழிகிறதோ, அவருடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாழன் கிரகம் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறது. இந்த கிரகம் அஸ்தங்கம் காலம் பிப்ரவரி 22 முதல் மார்ச் 22 வரை இருக்கும். கும்ப ராசியில் வியாழன் மற்றும் சூரியனின் இணைப்பு 12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது. குரு பெயர்ச்சி மேஷம் மற்றும் சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை தரும். பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு தற்செயல் நிகழ்வு நடந்திருக்கிறது.



மேலும் படிக்க | பிப்ரவரி 27 முதல் சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசிகள்! ரிஷபத்திற்கு சூப்பர் யோகம் 


குரு பகவான் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருப்பார்
ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு குரு அஸ்தங்கம் மிகவும் சுப பலன் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி அன்னையின் அருள் பொழியும். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்.


இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
கடகம், கன்னி, விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் குரு அஸ்தங்கம் போது கவனமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்ககளுக்கு சவாலாக இருக்கலாம், ஜாக்கிரதை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR