புதுடெல்லி: கோள்கள் அவ்வப்போது தங்கள் நிலைகளை மாற்றிக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்ற படி ஜோதிட பலன்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இவற்றில் சில மாற்றங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக சனி, குரு போன்ற சில கிரகங்களின் நிலை மாற்றம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவை நம் வாழ்வின் முக்கிய அம்சங்களில் குறிப்பிடத்தக்க சுப மற்றும் அசுப தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2022-ம் ஆண்டு வியாழன் தனது ராசியை மாற்றப் போகிறார். அவர்  2022, ஏப்ரல் 13ம் தேதி அன்று குரு தனது சொந்த ராசியான மீன ராசியில் பிரவேசிக்கிறார். மேலும் இந்த குரு பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு பெயர்ச்சியால் கீழ்கண்ட ராசிக்காரர்களின் தலைவிதியே மாறும்


கன்னி (Virgo): கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நன்மை தரும். வேலையில் வெற்றி உண்டாகும். முதலீடு செய்வதால் லாபம் உண்டாகும். சொத்துக்களால் லாபம் உண்டாகும். தொழிலும் மிக சிறப்பாக இருக்கும்.


விருச்சிகம் (Scorpio): குரு பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். அதிர்ஷ்டத்தின் உதவியால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் உருவாகும். வியாபாரிகளும் அதிக லாபம் அடைவார்கள்.


ALSO READ | கேது பெயர்ச்சி 2022: ‘இந்த’ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!


தனுசு (Sagittarius): மீனத்தில் குரு நுழைவது தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். தனுசு ராசிக்கு சொந்தக்காரரும் குரு என்பதால், அவருக்கும் குருவின் அருள் பூரணமாக கிடைக்கும். பதவி உயர்வு - அதிகரிப்புக்கான முழு வாய்ப்புகள் உள்ளன. வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கலாம்.


கும்பம் (Aquarius): 2022 ஏப்ரலுக்குப் பிறகு கும்ப ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கக்கூடும். தொழில்-வியாபாரம் இரண்டிலும் லாபகரமான சூழ்நிலை உண்டாகும். அதிக பணம் சம்பாதிக்கலாம். அதனால் எளிதாக சேமிக்கலாம் அல்லது எதிர்காலத்திற்காக முதலீடு செய்யலாம். வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | பிறந்த கிழமை உங்கள் குணாதிசயத்தை எடுத்து சொல்லும்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR