OMG!... தான் விரும்பிய பெண்ணுடன் டேட்டிங் செல்ல CV அனுப்பிய இளைஞர்!
தான் விரும்பும் பெண்ணுடன் டேட்டிங் செல்ல ரெஸ்யூம் கொடுத்து விண்ணப்பித்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது!
தான் விரும்பும் பெண்ணுடன் டேட்டிங் செல்ல ரெஸ்யூம் கொடுத்து விண்ணப்பித்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், தான் விரும்பும் பெண்ணுடன் டேட்டிங் செல்ல ரெஸ்யூம் கொடுத்து விண்ணப்பித்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த சான் டைகோ என்ற பல்கலைக்கழகத்தின் படித்து வரும் இளைஞர் ஜேம்ஸ், இவர் கிரிஸ்டி என்ற பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகள் நெருக்கமாக பழகி வருகிறார். இதையடுத்து, அவருக்கு அந்த பெண் மீது காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவருடன் டேட்டிங் செல்ல விரும்பியுள்ளார். இந்நிலையில், கிறிஸ்டியிடமே சென்று தனது ஆசையை ஜோம்ஸ் சொல்ல அவர் விளையாட்டிற்கு "என்னுடன் டேட்டிங் வரவேண்டும் என்றால் எனக்கு விண்ணப்பிக்க வேண்டும்" என ஜோக் அடித்துள்ளார்.
இதை உண்மை என கருதி அந்த இளைஞன் கிரிஸ்டியுடன் டேட்டிங் செய்ய ஒரு ரெஸ்யூமை தயார் செய்து அதை அவருக்கு அனுப்பியுள்ளார். இதைப் பார்த்த கிறிஸ்டி ஆச்சரியப்பட்டு அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த ட்வீட் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.