ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படம் டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வரும் படம் `சர்வம் தாள மயம்'. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரத்யேகமாக திரையிடப்படவுள்ளது.