வெளியானது ஜீவா-ன் புதிய படத்தின் டைட்டில்!
நடிகர் ஜீவாவின் புதிய படத்திற்கான தலைப்பு `ஜிப்சி` என வெளியாகி உள்ளது.
நடிகர் ஜீவாவின் புதிய படத்திற்கான தலைப்பு "ஜிப்சி" என வெளியாகி உள்ளது.
தற்போது நடிகர் ஜீவா கொரிலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் ராஜீவ் முருகன் இயக்கும் புதிய படத்தில் ஜீவா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்திற்கான டைட்டில் நேற்று இரவு 12.01க்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெறித்து இருந்தது. அந்த வகையில் இந்தப் படத்தின் தலைப்பு ஜிப்சி என வைக்கப்பட்டுள்ளது.