கணவருடன் செக்ஸ் லைப் எப்படி இருக்கு... அந்தரங்கத்தை பகிர்ந்த பிரபலத்தின் மனைவி
பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் உடனான தனது இல்லற வாழ்வு குறித்து அவரது மனைவி ஹெய்லி பீபர் மனம் திறந்து பேசியுள்ளார்.
பிரபல பாடகர் ஜஸ்டின் பீபரின் மனைவியும், மாடலுமான ஹெய்லி பீபர் (25) எப்போதும் திறந்த புத்தகமாகவே இருந்துள்ளார். இவர், சமீபத்தில், பிரபல மாடலான அலெக்ஸ் கூப்பரின் 'Call her daddy' என்ற பாட்காஸ்ட் எபிசோடில் ஹெய்லி பீபரும் பங்கேற்றிருந்தார். அதில், அலெக்ஸ் கூப்பரும், ஹெய்லியும் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினர்.
அதில், அலெக்ஸ், ஹெய்லி - ஜஸ்டின் ஆகியோருக்கு இடையிலான அந்தரங்கம் குறித்து கேட்டதற்கும் ஹெய்லி எந்த தயக்கமும் இன்றி பதிலளித்தார். அப்போது,"திருமணமான ஜோடிகளின் செக்ஸ் வாழ்க்கை குறித்து யார் கவலைப்படுவார்கள். ஆனால், பீபர் ஜோடி என்ற வரும்போது எல்லோருக்கும் ஒரு ஆர்வம் வந்துவிடுகிறது" என்றார். காலையை விட இரவில்தான் தாங்கள் உறவு மேற்கொள்ள விரும்புவோம் என்று கூறியிருந்தார்.
மேலும் படிக்க | Astro: இந்த ராசிகளிடயே ‘நல்ல உறவு’ சாத்தியமே இல்லை!
அதுமட்டுமின்றி, மூன்று பேர் இணைந்து உறவுவைப்பது (threesome) குறித்து இதுவரை எங்களிடம் யாரும் கேட்டதில்லை என்று தெரிவித்தார். "மூன்று பேர் உறவை மேற்கொள்ள நீங்கள் முடிவெடுத்துவிட்டால், அதில் இருந்து பின்வாங்கவே முடியாது என்பதே நிதர்சனம்" என்றார். இப்படி, அவர்களின் இல்லற வாழ்வு குறித்து பேசிக்கொண்டிருக்க, பிடித்த செக்ஸ் போஷிசன் குறித்து கேள்விக் கேட்கப்பட்டது.
அதற்கு, அது நேரத்திற்கு ஏற்றாற்போல் மாறப்படும் என்றும் ஆனால், மிஷினரி போஷிசன் மட்டும் ஆகவே ஆகாது என தடலாடியாக தெரிவித்தார். மேலும், தனக்கு டாகி ஸ்டைல் போஷிஷன் தான் பிடிக்கும் என்றும், முத்தம்தான் தன்னை அந்த மனநிலைக்கு கொண்டுவரும் என்றும் கூறினார். அதேபோல், ஜஸ்டினுக்கோ, உறவு வைப்பதற்கு முன் கட்டிலில் இயல்பாக பேசுவதுதான் பிடிக்கும் என்று கூறினார். இயல்பாக இருப்பதையே அவர் விரும்புவார் என்று ஹெய்லி இயல்பாக பேசினார்.
ஜஸ்டினின் நேர்மையும், உண்மையும் தான் தனக்கு மிகவும் பிடித்தது எனக் கூறும் ஹெய்லி, ஜஸ்டினும் உண்மையை வெளிப்படையாக பேசுபவர் என்றார்."அவரிடம் எது குறித்து வேண்டுமானாலும், அவரின் முன்னாள் பெண் தோழிகள் குறித்து வேண்டுமானாலும் கேட்க முடியும். மிகப் பொறுமையாக அது குறித்து பேசுவார். அவர் வெளிப்படையாக இருப்பதற்கு தயங்கவே மாட்டார். அவரின் நேர்மையால்தான் எங்கள் உறவு நீடித்து இருக்கிறது. ஏனென்றால், அவர் குறித்து எனக்கு தெரியாதது என்று எதுவுமே இல்லை.
ஜஸ்டினின் முன்னாள் காதலி செலினா ஜான்ஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,"ஜஸ்டின் - செலினா காதலித்து வந்தபோது, ஒருமுறை கூட நான் ஜஸ்டினை தனிமையில் சந்தித்தது கிடையாது. எங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டபோது, அவர் யாரையும் காதலிக்கவில்லை" என்றார்.
மேலும் படிக்க | தாம்பத்தியத்தில் சிக்கலா? மகிழ்ச்சியாக வாழ இந்த வாஸ்து டிப்ஸ் பலனளிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ