நமது தற்போதைய வாழ்க்கை முறை, உணவுகள், நமது தலைமுடியின் மீதான அக்கறையற்ற அணுகுமுறை போன்றவை வறண்ட, உதிர்ந்த மற்றும் சேதமடைந்த முடிகளுக்கான காரணங்களாக அமைகின்றன. நமது முடி சேதத்தை சரி செய்ய, முடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.  இயற்கையாக கிடைக்க கூடிய பழங்களில் அதிக சத்துக்கள் உள்ளது.  குறிப்பாக வாழைப்பழங்கள் வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சிலிக்கான் ஆகியவற்றின் சிறந்த சத்துக்களை கொண்டு பல்வேறு ஊட்டச்சத்து கூறுகளை கொண்டுள்ளன. இவை சேதமடைந்த முடியை மீட்டெடுக்க உதவுகின்றன. முடி வலுப்பெற வாழைப்பழ பேக் இயற்கையான கண்டிஷனராகக் கருதப்படுகிறது. வாழைப்பழ ஹேர் மாஸ்க் அதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காரணமாக பொடுகுக்கு சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இதய ஆரோக்கியம் & ரத்த சர்க்கரையை சீராக்கும் ஒமேகா அமிலங்கள், உடலுக்கு ஏன் அவசியம்?


முடிக்கு கலர் அடிப்பது மற்றும் ஸ்டைலிங் பொருட்களில் காணப்படும் நச்சு இரசாயனங்கள் காரணமாக முடி உதிர்தல் அதிகமாகிறது. உங்கள் முடிக்கு ஏற்ற தயாரிப்புகளை தேர்வு செய்து பயன்படுத்துவது நல்லது. உங்கள் தலைமுடியை ஈரப்படுத்தவும், உடைவதை தடுக்கவும் வாழைப்பழத்தில் பால் அல்லது கிரீம் கலந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தவும்.  1 வாழைப்பழம், 1 கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1 கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இதை உங்கள் தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.  ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒரு முறை இதனை பயன்படுத்துவதை நினைவில் கொள்ளுங்கள்.  


வறண்ட மற்றும் உதிர்ந்த கூந்தலை சரி செய்ய நீங்கள் வீட்டில் முயற்சி செய்யக்கூடிய மற்றொரு முறை, ஒரு டேபிள் ஸ்பூன் கண்டிஷனர், பாதி மசித்த வாழைப்பழம், ஒரு கப் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2-3 சொட்டு லாவெண்டர் எண்ணெய் ஒன்றாக கலந்து ஹேர் மாஸ்க் தயாரிக்கவும். அதை 20 நிமிடங்கள் தலையில் வைத்து இருந்து பின்னர் கழுவவும். இது உங்களுக்கு மிருதுவான மற்றும் பளபளப்பான முடியை உடனடியாக கொடுக்கும்.  


வாழைப்பழத்தின் பயன்கள்


குளிர்கால மாதங்களில் பொடுகு ஒரு பொதுவான முடி பிரச்சனையாக உள்ளது. இவை முறையின் ஆரோக்கியத்தை பாதித்து வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. வாழைப்பழத்தை உச்சந்தலையில் பயன்படுத்துவதால் வறட்சியான உச்சந்தலையை குறைக்கலாம். வாழைப்பழத்தில் உள்ள சிலிக்கா உள்ளடக்கம் முடியின் அமைப்பை உள்ளிருந்து மேம்படுத்த உதவுகிறது. இயற்கை எண்ணெய்கள் முடியின் தண்டுகளைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், முடி இழைகளின் அமைப்பையும் மேம்படுத்துகிறது. உங்கள் தலைமுடியில் வாழைப்பழங்களை தொடர்ந்து பயன்படுத்திய பிறகு மென்மையான முடி இழைகளை நீங்கள் பெறலாம்.  குளிர்காலம், தூசி, மாசுபாடு மற்றும் வெப்பமூட்டும் கருவிகளை அடிக்கடி பயன்படுத்துவதால் முடி உலர்ந்து சேதமடையலாம். வாழைப்பழத்தில் இயற்கையான எண்ணெய்கள் உள்ளன, அவை முடிக்கு ஆழமான கண்டிஷனிங்கை வழங்குகின்றன மற்றும் முடி இழைகளை பளபளப்பாக்குகின்றன, மேலும் அதற்கு உயிரையும் பொலிவையும் சேர்க்கின்றன. 


குறிப்பாக குளிர்காலத்தில் கடுமையான வானிலை காரணமாக முடி வறண்டு போகும். வாழைப்பழத்தில் இயற்கையான எண்ணெய்கள் உள்ளன, அவை முடி இழைகளுக்கு நீரேற்றத்தை வழங்குகின்றன மற்றும் அதிக அளவு உதிர்வதைக் கட்டுப்படுத்துகின்றன. சுத்தமான உச்சந்தலை முடிக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. தலைமுடிக்கு வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம், உச்சந்தலையில் தேவையான எண்ணெய் மற்றும் ஊட்டச்சத்தை வழங்கும், இது முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.


மேலும் படிக்க | தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் சருமம் அழகு மேம்படும், உடல் இளைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ