குளிர்காலத்தில் சூடாக டீ அல்லது காபி குடித்தால் உடலுக்கு நல்ல ஒரு உணர்வை தரும்.  ஆனால் இது தோல் மற்றும் முடி பிரச்சனைகளை கொண்டு வரும்.  இந்த குளிர்காலத்தில் க்ரீம்கள் மூலம் சருமத்தை ஈரப்பதமாக்குவது மற்றும் போதுமான தண்ணீரில் நீரேற்றம் செய்வதன் மூலம் பெரும்பாலான சரும பிரச்சனைகளை சரி செய்ய முடியும். எவ்வாறாயினும், குளிர்காலத்தில் நம் தலைமுடிக்கு அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. ஏனெனில் அவை வறண்டு, உடையக்கூடியவை மற்றும் பொடுகு பிரச்சனையால் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடியை வைத்திருக்க அனைவரும் விரும்புகின்றோம். ஆனால் இதற்கு பின்னால் பல வேலைகளை செய்ய வேண்டி உள்ளது.  முடியை பராமரிப்பதற்கு ஊட்டச்சத்தை விட அதிகம் தேவைப்படுகிறது. முடியில் தூசி, பொடுகு இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம்.  இல்லை என்றால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படும். தலைமுடியை எத்தனை நாளுக்கு ஒரு முறை கழுவ வேண்டும், என்ன மாதிரியான ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும், கண்டிஷனர் எப்படி பயன்படுத்தலாம், என்ன ஹேர் மாஸ்க்கு செய்ய வேண்டும், முடி நன்கு வளர என்ன சாப்பிட வேண்டும் என்ற கேள்விகளுக்கு மத்தியில், முடியை கழுவ குளிர்ந்த நீர் அல்லது சூடான நீர், இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வியும் உள்ளது.  


மேலும் படிக்க | சளி, இருமல், காய்ச்சல்... அத்தனைக்கும் ஆப்பு வைக்கும் இலை வகைகள்


மருத்துவர்கள் கூறியுள்ள அறிவுறுத்தலின் படி, வெந்நீர் முடிக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஏனெனில் அது முடியை நீரிழப்பு செய்து, உலர்ந்ததாகவும், உடையக்கூடியதாகவும் மற்றும் கடுமையானதாகவும் மாற்றுகிறது.  இதனால் குளிர்ந்த நீரே முடிக்கு சிறந்தது, ஏனெனில் அவை முடியை சேதப்படுத்தாது, அதற்கு பதிலாக அவற்றை பராமரிக்கிறது. முடிந்தவரை குளிர்ந்த அல்லது சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரை முடிக்கு பயன்படுத்துவது முக்கியம். கண்டிஷனர் அல்லது ஹேர் மாஸ்க் முடிக்கு தடவி இருந்தால், அவற்றை தண்ணீரை வைத்து நன்கு கழுவுவதும் முக்கியம்.  மேலும், ஒவ்வொரு முடி வகைக்கும் ஒவ்வொரு முறையில் முடி பராமரிப்பு அவசியம்.  


முடியில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் தினசரி கழுவுவது நல்லது. அவ்வாறு செய்வது ஈஸ்ட் அதிகமாக வளரும் வாய்ப்புகளை குறைக்கிறது மற்றும் பொடுகு தொல்லை குறையும். இருப்பினும், எண்ணெய் பசையுள்ள முடியை கழுவு ஷாம்பு மற்றும் கண்டிஷனரை சிறிது பயன்படுத்துவது அவசியம். சிலருக்கு மரபியல் ரீதியாக முடி உதிர்கிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சல்பேட் இல்லாத ஷாம்பூக்களை கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை உதிர்ந்த முடியைக் கழுவுவது நல்லது. இந்த ஷாம்புகள் உங்கள் தலைமுடியின் இயற்கையான எண்ணெய்களை தக்கவைத்து மேலும் உலர்த்துவதை தடுக்க உதவுகிறது. முடியை ஆழமாக வளர செய்ய உதவும் இயற்கை வெண்ணெய் மற்றும் சாறுகள் நிறைந்த ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவது சிறந்தது.


சுருள் முடி அல்லது சுருட்டை முடிகளை பராமரிப்பது கடினமாக இருக்கும். சுருள் முடியை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை லேசான அல்லது சல்பேட் இல்லாத ஷாம்பு அல்லது கண்டிஷனர் மூலம் கழுவலாம். முடி கொட்டாமல் இருக்க ஈரமான முடியை சீப்பு கொண்டு சீவாமல் இருப்பது நல்லது. அகன்ற பல் கொண்ட சீப்பை பயன்படுத்துவது நல்லது.  ஏனெனில் இது முடியின் தண்டை உடைக்காது. 


மேலும் படிக்க | இரத்த அழுத்தம் முதல் எடை இழப்பு வரை: ஆப்பிள் பழத்தின் அசத்தும் நன்மைகள்


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ