ஹனுமான் ஜெயந்தி: 1.08 லட்சம் வடைமாலையுடன் ஆஞ்சநேயர்
ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1,08,000 வடைகளை கொண்டு மாலை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது.
ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1,08,000 வடைகளை கொண்டு மாலை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது.
அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயர் சிலை இந்த கோவிலில் உள்ளது.
இந்நிலையில் ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு, வரிசையில் நின்று தரிசனம் செய்துவருகின்றனர்.
ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு, கடந்த 4 நாட்களாக 13 லட்ச ரூபாய் செலவில் வடை மாலை தயாரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 1,08,000 வடைகள் கொண்ட சிறப்பு வடை மாலை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது.