இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டன் தோனிக்கு 38 ஆவது பிறந்தநாள் இன்று!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 7, 1981 இல் பிறந்த 'கூல் கேப்டன்' மகேந்திர சிங் தோனி ஞாயிற்றுக்கிழமை 38 வயதாகிறது. MS.தோனி இந்த விளையாட்டு இதுவரை கண்டிராத உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் சின்னங்களில் ஒன்றாக உள்ளது.


எம்.எஸ். தோனியின் வாழ்க்கை டிசம்பர் 23, 2004 அன்று பங்களாதேஷுக்கு எதிரான ஒரு போட்டியுடன் தொடங்கியது. ஆனால் அவர் வரலாற்றில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக மாறினார். ஒருநாள் போட்டிகளில், MS.தோனி விரைவில் தடுத்து நிறுத்த முடியாத சக்தியாக மாறினார். எவ்வாறாயினும், இந்தியாவின் கேப்டனாகMS.தோனி கிரிக்கெட் உலகில் தனது அடையாளத்தை பதித்தார்.


வாழ்க்கை பயணம் :


தோனி தனது சிறு வயதில் பேட்மிண்டன் மற்றும் கால்பந்து போட்டிகளில் ஆர்வமாக இருந்தார். குறிப்பாக கால்பந்து போட்டிகளில் அவர் கோல் கீப்பராக இருந்தார். கால்பந்து போட்டிகளில் மாவட்ட மற்றும் கிளப் அளவிலான போட்டிகளுக்கு தோனி தேர்வு பெற்றார். இந்நிலையில் தான் கிரிக்கெட் விளையாடும் படி உள்ளூர் கால்பந்து பயிற்சியாளர் அனுப்பி வைத்தார். தோனி தனது விக்கெட் கீப்பிங் திறமைகளால் பாராட்டப்பெற்று கிளப் அணிகளில் இணைந்தார் (1995 - 1998). தோனியின் திறமையால் 16 வயதுக்குட்பட்டோருக்கான வினு மான்கட் டிராபி சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். 


கிரிக்கெட் பயணம் :


ஒருநாள் போட்டி


2004-ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக அறிமுகமான எம்.எஸ்.தோனி இதுவரை 348 ஒருநாள் போட்டிகளில் 10 சதங்கள், 72 அரைசதங்கள் விளாசியுள்ளார். 2005ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த அவருடைய ஒருநாள் சர்வதேச போட்டியில் டோனி 148 ரன்கள் எடுத்தார் – அதுவே இந்திய விக்கெட் கீப்பர் எடுத்த அதிகபட்ச ரன் ஆனது. அந்த ஆண்டில் பிற்பகுதியில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக அவர் ஆட்டம் இழக்காமல் 183 ரன்கள் எடுத்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். ஒருநாள் போட்டியின் கேப்டனாக 2007 முதல் 2016 வரை இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். 199 போட்டிகளில் பங்கேற்று 110 வெற்றியை பெற்று தந்துள்ளார்.


டெஸ்ட் போட்டி


இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் 2005-ம் ஆண்டில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக தோனி களமிறங்கினார். அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். தோனி கேப்டனாக பதவி ஏற்றபின் 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்தது. 90 போட்டிகளில் விளையாடிய தோனி 6 சதம், 33 அரைசதம் உள்பட 4876 ரன்கள் எடுத்துள்ளார். 2013ஆம் ஆண்டு அவருக்கு பிடித்தமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியில் டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச தனிப்பட்ட ரன்களான 224 ரன்களை எடுத்தார்.  டெஸ்ட் போட்டிகளில் அவர் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார்.


டி 20 போட்டி


2006-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 போட்டியில் அறிமுகம் ஆனார். 98 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 1617 ரன்கள் எடுத்துள்ளார். டி 20 போட்டியில் இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். தோனி தலைமையில் தான் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி டி 20 உலக கோப்பையை கைப்பற்றியது. 


இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி இந்திய அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார். ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆனாலும் உலககோப்பையையே வென்றாலும் அலட்டிகொள்ளாத இயல்பே தோனிக்கு அதிகமான ரசிகர்ளை பெற்றுதந்தது! அவர் எவ்வளவு தான் சொதப்பலான ஆட்டத்த கொடுத்தாலும் எங்க தல தோனின்னு சொல்ல ஒரு பெரிய கூட்டம் எப்பவும் இருந்துட்டு தான் இருக்கு.


தோனியின் சாதனைகள் :


1. சர்வதேச ஒருநாள் போட்டியில் நாட் அவுட் ஆகாமல் அதிக வெற்றியை பெற்றுத் தந்த பெருமைக்கு சொந்தகாரர்


2. ஒரு விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ரன்கள் என்ற ஆடம் கில்கிறிஸ்டின் 172 ரன்கள் தோனி (183) சாதனையை அவர் முறியடித்தார்.


3. 2011-ம் ஆண்டில் இலங்கை அணியை உலககோப்பை இறுதி போட்டியில் வீழ்த்தி மகுடம் சூடியது.


4. கபில்தேவிற்கு பின் இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்றுத்தந்த கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.


5. 2007 ஆம் ஆண்டு முதல் 2016 வரை நடைபெற்ற 6 டி 20 உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு அணியை தொடர்ச்சியாக வழிநடத்திய ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனியையே சேரும். 


6. ஐசிசி நடத்தும் 50 ஓவர், 20 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை தோனியை சேரும்.


7. தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங் பற்றி அறியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். சர்வதேச போட்டியில் அதிக ஸ்டெம்பிங் எடுத்த வீக்கெட் கீப்பரும் இவரே. ஒரு மனிதனின் கண் இமைக்கும் வேகம் 0.3 செகண்ட் ஆனால் தோனியின் ஸ்டெம்பிங் வேகம் 0.08 செகண்ட் என்பது உலக சாதனை. 


8. தோனி இதுவரை 132 பந்துகள் வீசி 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒரு விக்கெட் கீப்பரால் வீசப்பட்ட அதிகமான பந்துகள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 


9. உலக கிரிக்கெட் அரங்கில் அதிவேகமா( 42 இன்னிங்ஸ் ) ஒருநாள் போட்டியில் ஐசிசி தர வரிசையில்  நம்பர் 1 ரேங்கில் இடம் பிடித்த ஒரே வீரர்.