SSFB FD Interest Rate: மூத்த குடிமக்கள் இப்போது சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் FD திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 9 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியைப் பெறலாம். சூர்யோதாய் ஸ்மால ஃபைனான்ஸ் வங்கி இப்போது மூத்த குடிமக்களுக்கு FD திட்டத்தின் மீது 4.50 சதவீதம் முதல் 9.10 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்த முடிந்த எம்பிசி கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (SSFB) மூத்த குடிமக்களின் நிலையான வைப்புத் திட்டத்தின் (FD) வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.


மூத்த குடிமக்கள் இப்போது சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் FD திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 9 சதவீதக்கும் அதிகமான வட்டியைப் பெறலாம். வங்கி இப்போது மூத்த குடிமக்களுக்கு 4.50 சதவீதம் முதல் 9.10 சதவீதம் வரையிலும், பொது மக்களுக்கு 4 சதவீதம் முதல் 8.60 சதவீதம் வரையிலும் 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் FD திட்டங்களை வழங்குகிறது.


மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் எவ்வளவு தொகை வைத்திருக்க வேண்டும்?


FD-இன் காலகட்டம்


இந்த வட்டி விகிதம் இரண்டு கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு கிடைக்கும் என அந்த வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் NBFC-கள் மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புத் திட்டங்களை வழங்குகின்றன. 


சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் மூத்த குடிமக்கள் 2 முதல் 3 வருடங்களில் முதிர்ச்சியடையும் FD திட்டங்களுக்கு 9.10 சதவீத வட்டியைப் பெறுவார்கள். அதே நேரத்தில், பொது வாடிக்கையாளர்களுக்கு இந்த காலகட்டத்தின் வைப்புத்தொகைக்கு 8.6 சதவீத வட்டி கிடைக்கும். 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு 9 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது.


சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான FD திட்டங்களுக்கு 4.50 சதவீத வட்டியை வழங்குகிறது. வங்கி 15 முதல் 45 நாட்களுக்கு நிலையான வைப்புகளுக்கு 4.75 சதவீத வட்டியை வழங்குகிறது. 46 முதல் 90 நாட்கள் வரையிலான FD திட்டத்திற்கு 5.00 சதவிகிதம் வட்டி வழங்கப்படும். 91 முதல் 6 மாத நிலையான வைப்புத்தொகைக்கு 5.50 சதவீதம் வட்டி கிடைக்கும். 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 6.00 சதவீத வட்டியை வங்கி உறுதியளிக்கிறது. 9 மாதங்களுக்கும் மேலான மற்றும் 1 வருடத்திற்கும் குறைவான FD திட்டங்களுக்கு 6.50 சதவிகிதம் வட்டி வழங்கப்படும்.


FD திட்டங்களுக்கான வட்டி விகிதம்


சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஓராண்டுக்கான நிரந்தர வைப்புத்தொகைக்கு 7.35 சதவீத வட்டியை வழங்குகிறது. வங்கி 1 வருடம் முதல் 15 மாதங்கள் வரை FD திட்டங்களுக்கு 8.75 சதவீத வட்டியை செலுத்தும். 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 9.00 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது.


2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு வங்கி 9.10 சதவீத வட்டியை செலுத்தும். 3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறைவான FD திட்டங்களுக்கு வங்கி 7.25 சதவீத வட்டியை செலுத்தும். 5 வருட FD திட்டங்களுக்கு 8.75 சதவீதமும், 5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு 7.75 சதவீதமும் வட்டியை வங்கி வழங்குகிறது.


13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 564-க்கும் மேற்பட்ட வங்கி விற்பனை நிலையங்கள் மற்றும் 5085 பணியாளர்கள் மற்றும் 1.64 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி வேகமாக வளர்ந்து வரும் சிறு நிதி வங்கிகளில் ஒன்றாகும். சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி FD மற்றும் சேமிப்பு வங்கி வைப்புகளில் அதிக வருமானத்தை வழங்குவதாகக் கூறுகிறது.


மேலும் படிக்க | SBI RuPay கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் UPI-ல் பணம் செலுத்தலாம் - இதோ வழிமுறை
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ