நாட்காட்டியை நாம் பார்க்கும்போது சில வினோத எண்ணிக்கையில் தேதிகளை நாம் சில சமயம் காண்கிறோம். இவை மிக அரிதான தேதிகளாக இருக்கும். அத்தகைய தேதிகளை அடிக்கடி காண முடியாது. இவை நீண்ட காலத்துக்குப் பின்னரே மீண்டும் வரும். இன்று அப்படிப்பட்ட ஒரு நாள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


22/02/2022 என்பது அரிதானது மட்டுமல்ல, இதில் அரிதான இரு விஷயங்கள் உள்ளன. இந்த தேதி ஒரு பாலிண்ட்ரோம் ஆகவும் அம்பிகிராம் ஆகவும் இருக்கிறது. அதாவது, இந்த தேதியை முன்னோக்கி, பின்னோக்கி, மற்றும் தலைகீழாக படித்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதே இதன் பொருள்.


பிரிட்டிஷ் வடிவத்தில் 22/02/2022 -ஐ எழுதினால், இந்த தேதி ஒரு பாலிண்ட்ரோம் மற்றும் அம்பிகிராம் ஆக உள்ளது. இது ஒரு சிறப்பு மற்றும் மிகவும் அரிதான வடிவமாகும்.


தேதிகள் ஒரு பாலிண்ட்ரோமாக இருப்பது அசாதாரணமானது அல்ல. எடுத்துக்காட்டாக, 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி அமெரிக்க வடிவத்தில் (2/20/2022) எழுதப்பட்டால் அதுவும் ஒரு பாலிண்ட்ரோமாக மாறும்.  


இன்றைய தேதியின் விந்தை பல வழிகளில் கொண்டாடப்படுகிறது. பிராண்டுகள் மற்றும் பல நிறுவனங்கள் உணவு மற்றும் தங்கள் தயாரிப்புகளில் சலுகைகளை வழங்குகின்றன. தனது காதலன் / காதலியிடம் காதலை சொல்லவும், வாழ்க்கையில் புதிய விஷயங்களை துவக்கவும் இது நல்ல நாளாக இருக்கும் என பலர் பலர் சமூக ஊடகங்களில் கூறியுள்ளனர்.


“இன்று ஒரு பாலிண்ட்ரோம் மற்றும் ஒரு ஆம்பிகிராம். இந்த தேதியை முன்னோக்கி, பின்னோக்கி, மற்றும் தலைகீழாக படித்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும். இது இந்த ஆண்டின் என்னுடைய மிகவும் பயனுள்ள ட்வீடாக இருக்கலாம். குட் டே” என்று எழுத்தாளர் எட் சாலமன் ட்வீட் செய்துள்ளார்.


போர்ட்லேண்ட் பல்கலைக்கழகத்தின் மின் பொறியியல் பேராசிரியரான அஜீஸ் எஸ். இன்னான், பாலிண்ட்ரோம் நாட்கள் ஒவ்வொரு மில்லினியத்தின் முதல் சில நூற்றாண்டுகளில் mm-dd-yyy பிரிட்டிஷ் வடிவத்தில் மட்டுமே ஏற்படும் என்று கூறினார்.


"mm-dd-yyyy வடிவத்தில், தற்போதைய மில்லினியத்தில் (ஜனவரி 1, 2001 முதல் டிசம்பர் 31, 3000 வரை) 36 பாலிண்ட்ரோம் நாட்களில் முதல் நாள் அக்டோபர் 2, 2001 (10-02-2001) மற்றும் கடைசி நாள் செப்டம்பர் 22, 2290 (09-22-2290)” என்று அவர் குறிப்பிட்டார்.


மேலும் படிக்க | இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?


இன்றைய தேதி "எங்கும் பரவும் பாலிண்ட்ரோம் தேதி" என்று அவர் கூறினார். ஏனெனில் இது ஒரு ஷார்ட் ஹேண்ட் பாலிண்ட்ரோம் ஆகும். 


ஷார்ட் ஹேண்ட் பிரிட்டிஷ் வடிவத்தில், தேதி 22-2-22 என்ற வடிவத்தில் இருக்கும். ஷார்ட் ஹேண்ட் அமெரிக்க வடிவத்தில் தேதி 2-22-22 ஆகத் தோன்றும். 


பிப்ரவரி 2, 2022 (2-2-22) போன்ற எங்கும் நிறைந்த பாலிண்ட்ரோம் தேதிகள் ஒவ்வொரு 11 வருடங்களுக்கு ஒரு முறை வரும் என்று அவர் கூறினார். அடுத்த பாலிண்ட்ரோம் தேதி மார்ச் 3, 2033 (3-3-33) பின்னர், ஏப்ரல் 4, 2044 (4-4-44)-ல் வரும் என்றார் அவர்.


 “இரண்டாவதாக, பிப்ரவரி 22, 2022 என்பது முழு எட்டு இலக்க பாலிண்ட்ரோம் தேதியாகும் (22-02-2022). மேலும் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 22, 2222 (22-2-2222) அன்று மீண்டும் ஏழு இலக்க பாலிண்ட்ரோம் தேதி வரும்.” என அவர் ஊடகங்ளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 


மேலும் படிக்க | PF Account: எளிய வழியில் உங்கள் புதிய வங்கிக் கணக்கை பிஎஃப் கணக்குடன் சேர்க்கலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR