30 வயதுக்குள் ‘இந்த’ 7 உண்மைகளை தெரிஞ்சிக்கோங்க..! இல்லன்னா வருந்துவீங்க..
நமக்கு, 30 வயதாவதற்குள் சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். அது குறித்து இங்கு பார்ப்போம்.
90ஸ் குழந்தைகள் இனி குழந்தைகள் அல்ல. 2000ல் பிறந்தவர்களுக்கே இந்த ஆண்டு 24 வயதாகிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நம்மில் பலர், வயதாகியும் கூட, நம்மை நாமே இன்னும் குழந்தைகள் என நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், நமக்கு 30 வயதாவதற்குள் நாம் வாழ்க்கை குறித்த ஒரு சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இந்த உண்மைகள் கேட்பதற்கு கசப்பானவையாக இருந்தாலும், நம் கண்களை திறக்க அது உதவலாம். அவை என்னென்ன தெரியுமா?
1.வாழ்க்கை எப்போதும் அழகானதாக இருக்காது:
நம்மில் பலர், சிறுவயதில் இருக்கும் போது எப்போதுதான் வளர்ந்து பெரிய ஆள் ஆவோமோ என்று யோசிப்போம். ஆனால் வளர்ந்த பிறகுதான் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற புரிதலே வரும். சிறுவயதில் பெரிய மனிதராக மாறிவிட்டால் ஜாலியாக இருக்கலாம் என்று எண்ணிய கனவெல்லாம் பொய்த்து விடும். சந்தோஷமே இல்லாத வாழ்க்கை என்ற ஒன்று இல்லை. அது போல, நம் வாழ்க்கையில் சோகம் தொடாமல் போக செய்யாது. இதை, நாம் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். வாழ்வில் வரும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொள்ள வேண்டும்.
2.நேரத்தை கையில் பிடிக்க முடியாது:
ஒரு சிலர், நாம் இளமையாக இருக்கிறோம் என நினைத்துக்கொண்டு கையில் இருக்கும் நேரத்தை விரயம் செய்து கொண்டிருப்பர். ஆனால், காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே, கையில் இருக்கும் நேரத்தை வீணாக்கமல் செய்ய நினைக்கும் காரியத்தை யோசித்து உடனே அதற்கான செயலில் ஈடுபடுதல் வேண்டும்.
3.பொறுப்பு:
வயது ஏற ஏற, பொறுப்பும் கூடும் என சிலர் கூறுவர். அது உண்மைதான் என்றாலும், அப்பொறுப்பு உங்களை தாண்டி அல்ல உங்களிடம்தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்களது நிதி, உணர்ச்சிகள், சமூக அந்தஸ்து என அனைத்தும் உங்களது கைகளில்தான் இருக்கின்றது. எனவே, உங்கள் வாழ்வில் எது நேர்ந்தாலும் அதற்கான முழு பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வது உங்கள் கையில் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.
4.உடல் நலன் மீது கவனம்:
குழந்தையாக இருந்த போது, அனைத்தும் நம் கைவசப்படுவது போன்ற உணர்வு இருக்கும். ஆனால் வயதாகும் போது உடல் ஆற்றல், துரிதமாக செயல்படும் திறன் என அனைத்தும் குறைந்து போகலாம். உங்கள் உடலை பார்த்துக்கொள்ள, நீண்ட நாட்கள் வாழ கண்டிப்பாக ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பேணிக்காப்பது முக்கியமாகும். சரியான ஓய்வு, ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், காலை உடற்பயிற்சி போன்ற விஷயங்களை முதன்மை படுத்துவது மிகவும் முக்கியமாகும்.
மேலும் படிக்க | 5 மாசத்துல உங்கள் வாழ்க்கை 5 வருஷம் முன்னாடி போய்டும்! ‘இதை’ பண்ணுங்க!!
5.நிலையில்லாத உறவுகள் குறித்த புரிதல்:
நம் வாழ்வில், நம்முடன் சிறு வயதில் இருந்தே தொடரும் நட்பில் இருந்து, ரத்த சொந்தங்களை தாண்டி, காதல் உறவு வரை எதுவுமே நிலையான உறவு இல்லை என்ற புரிதல் இருக்க வேண்டும். இதில் சில உறவுகள் நீங்கள் வளரும் தருவாயில் முடிவுக்கு வரலாம். அதற்கு உங்கள் மனதை நீங்கள் பழக்கிக்கொள்ள வேண்டும். உங்களிடம் டாக்ஸிக்காக இருக்கும் நபர்களை விட்டொழிப்பதும், உங்களுக்கு தேவையற்ற உறவு முடிவிற்கு நீங்களே காரணமாக இருப்பதும் மனக்கசப்பை கொடுத்தாலும் அதுதான் உண்மை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
6.உங்களை பற்றிய அறிதல்:
உங்களை பற்றி நீங்களே அறிந்து கொள்வது நீங்கள் 30களில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களுள் ஒன்றாகும். உங்களிடம் இருக்கும் நிறை குறைகள், உங்களிடம் இருக்கும் நற்குணங்கள் என அனைத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் இன்னொருவருடன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவும், உங்களுடன் நீங்களே ஏற்படுத்திக்கொள்ளும் உறவும் நன்றாக அமையும்.
7.20களை சரியாக உபயோகித்தல்:
30களை தொடும் வரை பொறுப்புக்காக காத்திருத்தல் கூடாது. 20களில் தவறு செய்து அதை திருத்திக்கொள்வதில் தவறில்லை என்றாலும், தெரிந்தே ஒரு தவறை செய்ய கூடாது. இளம் வயதிலேயே உங்களின் கனவு மற்றும் எதிர்காலம் குறித்த திட்டமிடுதலை ஏற்படுத்திக்கொள்ளுதல் நல்லதாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ