5 மாசத்துல உங்கள் வாழ்க்கை 5 வருஷம் முன்னாடி போய்டும்! ‘இதை’ பண்ணுங்க!!

Life Changing Habits : நம் வாழ்வை மாற்ற நாம் தினசரி செய்ய வேண்டிய பழக்க வழக்கங்களை மாற்றுக்கொள்ள வேண்டும். எனவே, நாம் தினசரி மாற்ற வேண்டிய பழக்கங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Life Changing Habits :  நாம் தினசரி கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள், நமது வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்தது. நாம் எப்படிப்பட்ட நபர் என்பதை கூட, இதுதான் தீர்மானிக்கிறது. நம் வாழ்வை மாற்ற வைக்கும் சில பவர்ஃபுல் பழக்கங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 

1 /8

நாம், இப்போது இருக்கும் நிலையில் இருந்து இன்னும் 5 வருடம் முன்னேறி செல்ல நினைத்தால், நாம் தினசரி செய்ய வேண்டிய விஷயங்களும் பழக்க வழக்கங்களும் நிறைய இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

2 /8

நெகடிவ் ஆற்றலை அப்புறப்படுத்துதல்: நம் வாழ்வில் நம்மை கீழே இழுக்கும், நம்மிடம் எப்போதும் இருக்கும் நெகடிவ் ஆற்றலை கொடுக்கும் விஷயங்களிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் விலகி இருக்க வேண்டும். அது என்ன என கண்டுபிடித்து, அதிலிருந்து உங்களை நீங்களே விலக்கிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். 

3 /8

கற்றலை வளர்த்துக்கொள்ளுதல்: தினமும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்வதற்கு முனைப்பு காட்ட வேண்டும். இது, உங்களது அறிவை வளர்ப்பதோடு மட்டுமன்றி உங்களது தனிப்பட்ட வாழ்வையும் பன்மடங்காக வளர்த்து விடும். இதன் மூலம் நீங்கள் அடையும் வெற்றி பெரிதாக இருக்கும். 

4 /8

அன்பு செலுத்துதல்: தினமும் பிறரிடமும், உங்களிடம் பணிவாகவும் அன்பாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இது, உங்களுக்கு பாசிடிவ் எனர்ஜியை தருவதோடு மட்டுமன்றி, வாழ்க்கை குறித்த ஒரு புரிதலையும் உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும். 

5 /8

நன்றியுணர்வு: உங்களது நாள், எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த நாளின் இறுதியில் உங்களுக்கு அன்றைய தினம் நடந்த நல்ல விஷயங்களை மட்டும் நினைத்து பாருங்கள். இப்படி நீங்கள் தினமும் செய்தீர்களே ஆனால், கண்டிப்பாக உங்களால் நினைத்தாலும் நெகடிவாகவோ, உங்களை பற்றி தவறாகவோ யோசிக்க இயலாது. 

6 /8

தினமும் உடற்பயிற்சி செய்வது, மனதை மட்டுமல்ல, உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதனால் உடல் எடை குறைவதோடு மனதில் இருக்கும் பாரமும் கொஞ்சம் கொஞ்சமாக குறையலாம். 

7 /8

சமூக வலைதளங்கள் உள்பட அனைத்து ஊடகங்களில் இருந்தும் கொஞ்ச நாள் ஓய்வு எடுங்கள். நாம் நினைப்பதை விட, சமூக வலைதளம் நமது மன நலனை அதிகம் பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, உங்களுக்கு வேலை இல்லாத சமயத்தில், சமூக வலைதளங்களில் மூழ்கி விடாமல் அதிலிருந்து கொஞ்சம் விலகியே இருங்கள். 

8 /8

நீங்கள் ஒரு வேலையை, எந்த வித கவன சிதறலும் இன்றி ஆழ்ந்து செய்யும் போது, அதிலிருந்து கிடைக்கும் பலன்களுக்கு மதிப்பு அதிகம். அது, உங்களின் அலுவலக வேலையாக இருக்கலாம். அல்லது உங்களது தனிப்பட்ட வேலையாக இருக்கலாம். அனைத்தையும் ஒரு சேலஞ்சாக எடுத்துக்கொண்டு கண்டிப்பாக அந்த வேலையை முழு கவனத்துடன் செய்ய வேண்டும். இந்த பழக்க வழக்கங்களை 5 மாதங்கள் செய்தால், நீங்களே இந்த மாற்றங்களை கண்கூடாக பார்ப்பீர்கள்.