குழந்தையின் வருகையை விமர்ச்சையாக கொண்டாடிய நடாஷா - ஹர்திக் பாண்டியா..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு (Hardik Pandya) கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போதிலிருந்தே சமூக வலைத்தளத்தில் தான் தந்தையான விஷயத்தை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு புகைப்படங்களுடன் கொண்டாடி வருகிறார். 


இந்த சூழலில் அவரது இணையர் நடாஷா ஸ்டான்கோவிக் உடன் இருக்கின்ற படத்தை நேற்று பகிர்ந்த அவர்... "என் வாழ்நாளில் சிறந்த பரிசு கொடுத்த உனக்கு நன்றிகள்" என்ற தலைப்புடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன், தனது காதலி நடாஷா ஸ்டான்கோவிகை என் ரோஜாவுக்காக பூத்த ரோஜாக்கள் எனவும் வர்ணித்துள்ளார். 



 ALSO READ | நடாசா -ஹர்திக் பாண்டியா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது; படத்தை பகிர்ந்த ஆல்ரவுண்டர்



கடந்த வியாழன் அன்று ஆண் குழந்தையினால் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளோம் என தான் அப்பாவான மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் ஹர்திக் பாண்டியா பதிவிட்டுருந்தார். தொடர்ந்து தனது குழந்தையின் படத்தையும் கடந்த சனிக்கிழமை சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அத்துடன் தனது குழந்தைக்காக ஷாப்பிங் செய்த பொருட்களையும் அவர் பகிர்ந்தார். நடாஷாவும், ஹர்திக் பாண்டியவும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.