யானை சூரிய நமஸ்காரம் செய்து பார்த்ததுண்டா? இதோ பாருங்கள்...
மனிதர்களைப் போலவே, விலங்குகளும் சூரியனுக்கு நன்றி சொல்லும் விதத்தில் நமஸ்காரம் செய்கின்றன, நம்ப முடியவில்லை என்றால் இந்த புகைப்படத்தைப் பாருங்கள்! இது போன்ற ஆச்சரியமான மற்றும் வித்தியாசமான விஷயங்கள் அனைவரையும் கவர்கின்றன.
புதுடெல்லி: நீங்கள் மட்டும் தான் காலையில் எழுந்து சூர்யா நமஸ்காரம் செய்வீர்களா என்று விலங்குகளும் போட்டிக்கு வந்துவிட்டன போலும்... மனிதர்களைப் போலவே, விலங்குகளும் சூரியனுக்கு நன்றி சொல்லும் விதத்தில் நமஸ்காரம் செய்கின்றன, நம்ப முடியவில்லை என்றால் இந்த புகைப்படத்தைப் பாருங்கள்!
கேமராவில் படம்பிடிக்கப்பட்ட அழகான தருணங்கள்
இதுபோன்ற சில விலங்குகளின் காட்சிகள் பல முறை கேமராவில் படம் பிடிக்கப்படுகின்றன, இது போன்ற ஆச்சரியமான மற்றும் வித்தியாசமான விஷயங்கள் அனைவரையும் கவர்கின்றன. அண்மையில், யானை ஒன்று சூரிய நமஸ்காரம் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. வெளியே செல்லும்போது திடீரென்று பார்க்கும் வித்தியாசமான காட்சிகளை கேண்டிட் ஷாட்களாக (Candid Shots) பலரும் கிளிக் செய்கின்றனர். ஆனால் இதுபோன்ற அற்புதமான தருணங்களை அடிக்கடி காணக் கிடைக்கும் வாய்ப்பு பெற்ற வன சேவை அதிகாரி சுஷாந்த் நந்தா, அவற்றை மற்றவர்களுடனும் பகிர்ந்துக் கொள்கிறார்.
அழகான வனவிலங்குகள் மற்றும் பறவைகள் மற்றும் விலங்குகளுடன் அவர் அதிக நேரத்தை செலவிடுகிறார். மிக அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் ட்விட்டரில் பகிர்ந்து கொள்கிறார்கள். அவற்றை பார்க்கும் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக என்று அனைவருக்கும் ஷேர் செய்து வைரலாக்குகின்றனர்.
யானையின் சூரிய வணக்கம்
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா சமீபத்தில் யானையின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்தால், யானை சூரியனுக்கு வணக்கம் செலுத்துவது போல் தெரிகிறது. இந்த வைரல் புகைப்படத்தைப் பார்த்தால், இதுதான் மனதில் தோன்றும். இந்த ஷாட் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியின் வால்பேப்பரை மாற்ற விரும்பினால், யானையின் சூரிய நமஸ்காரம் செய்யும் காட்சி நிச்சயமாக நேர்மறை ஆற்றலைத் கொடுக்கும்.
இந்த டிவிட்டர் பதிவில், இது யானையின் சூரிய நமஸ்காரம் என்று சுஷாந்த் நந்தா எழுதியிருக்கிறார். இந்த வைரல் புகைப்படத்தில் தங்கள் வித்தியாசமான கருத்துகளை சமூக ஊடக பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒருபுறம் அவர்கள் இந்த போஸ் (Pose) மிகவும் அழகாகவும் தனித்துவமாகவும் (Unique) இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள், மறுபுறம் இந்த புகைப்படத்தில் உள்ள யானை, பழத்தை பறிக்க முயற்சிக்கிறது என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்! யானையின் உடலில் காணப்படும் வெள்ளை புள்ளிகள் அல்லது பூஞ்சை தொற்று (Fungal Infection) குறித்தும் பலர் குறிப்பிடுகின்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR