நீலகிரி அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை சரக்கு வாகனத்தைத் துரத்திச் சென்று சாலையில் இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் சுவாமி கோயில் யானை குளிப்பதற்கு 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குளியல் தொட்டியை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இரவு நேரத்தில் 5 காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Tiruchendur Temple Elephant Attack: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வளர்க்கப்படும் தெய்வானை என்ற யானை இருவரை தாக்கியதில், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதுமலை சாலையில் யானைகளை இடையூறு செய்யும் விதமாக வாகனங்களை நிறுத்தி புகைப்படம் வீடியோ எடுக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நெல்லையப்பர் கோவில் முன்பு ஏற்றப்பட்ட தேசியக் கொடிக்கு கோவில் யானை காந்திமதி தும்பிக்கையை உயர்த்தி, பிளிறி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது.
கோவை அருகே வீட்டின் வாயிற்கதவைத் திறந்து உள்ளே நுழைந்த காட்டு யானை ஓன்று சுற்றுச்சுவரை இடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே, குமுளி நோக்கி வந்த அரசு பேருந்து கவி வன சாலை வழியாக வரும் போது, அதனை வழி மறித்து துரத்திய காட்டு யானை; ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை பின்னோக்கி இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. யானை வன பகுதிக்குள் சென்ற பிறகு பேருந்தை எடுத்து விரைந்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் குட்டி யானை ஒன்று விழுந்தது. அப்போது, தாய் யானை கிணற்றை விட்டு செல்லாமல் வட்டமடித்து நின்ற நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின் தானே தனது குட்டியை மீட்டுக்கொண்டு வன பகுதிக்குள் சென்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.