இராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பங்களுக்காக HDFC வங்கி 'ஷௌர்ய கே.ஜி.சி கார்டை' (Shaurya KGC Card) அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், வீரர்களின் குடும்பங்கள் விதை, உரம் போன்ற விவசாய சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்க முடியும். இராணுவ வீரர்களின்பணியாளர்களின் குடும்பங்கள் இந்த நிதியில் இருந்து விவசாய இயந்திரங்கள், நீர்ப்பாசனத்திற்கான உபகரணங்கள் போன்ற பொருட்களையும் வாங்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவசாயிகளின் கிரெடிட் கார்டான கிசான் கிரெடிட் கார்டு (KCC) வழிகாட்டுதலின் அடிப்படையில் 'ஷௌர்ய கே.ஜி.சி கார்டு' தொடங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையின் அடிப்படையில் 10 லட்சம் ரூபாய் வரையிலான ஆயுள் காப்பீடும் கிடைக்கும்.


HDFC -ன் நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரி கூறுகையில், இராணுவப் படையில் பணிபுரியும் வீரர்களின் குடும்பங்களுக்காக இந்த அட்டையை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் என்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. நானே விமானப்படையுடன் தொடர்புடைய குடும்பத்திலிருந்து வருபவன். நமது இராணுவப் படை வீரர்கள் நாட்டுக்காக ஒரு பெரிய தியாகத்தை செய்கிறார்கள் என்றார்.


ALSO READ: வீட்டுக் கடன் வாங்க இந்த COVID காலம் சரியான காலமா? ஆம் எங்கிறார்கள் நிபுணர்கள்!!


“நமது இராணுவப் படைகளின் குடும்பங்களுக்காக இப்படிப்பட்ட ஒரு பணியை செய்த பிறகுதான் எனக்கு ஒரு பரிபூரண திருப்தி கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன். விவசாயிகளைப் போலவே, இப்போது இராணுவப் படையினரின் குடும்பங்களுக்கும் நாங்கள் ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். இது எங்கள் சார்பாக அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் சுதந்திர தின பரிசு.” என்று அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக, HDFC வங்கி  (HDFC Bank) விவசாயிகளை நேரடியாக சென்றடைய சிறப்பம்சம் வாய்ந்த E-Kisan Dhan App-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த செயலி, விவசாய உதவிக்குறிப்புகள் மற்றும் வங்கி தொடர்பான சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குகிறது. இந்த செயலியில், விவசாயத்துடன் தொடர்புடையவர்களுக்கு பல தகவல்கள் வழங்கப்படுகின்றன.


ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நோக்கத்துடன் இந்த செயலியை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கியின் 'ஒவ்வொரு கிராமமும் நம்முடையது' என்ற முன்முயற்சியின் நோக்கம் கிராமப்புற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கி வசதிகளை வழங்குவதாகும்.


ALSO READ: BSNL: 3 GB data 79 ரூபாய் மட்டுமே... இணையமோ அதிவேகம்!!!