‘இத்துனூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..’ இச் இச் முத்தத்தால் இத்தனை நன்மைகளா?
Benefits of Kissing: காதல், அன்பு போன்ற வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளை நமது அன்புக்குரியோரிடம் நாம் முத்தத்தின் மூலம் வெளிப்படுத்துகிறோம். முத்தத்தால் அன்பை வெளிபடுவதுடன் வேறு சில மாற்றங்களும் நிகழ்வதாக சில ஆராய்ச்சிகள் தெரிவித்துள்னர்.
முத்தம் காதல், ஆசை, காமம் போன்ற பல வகையான அன்பு உணர்வுகளை வெளிப்படுத்துவதும் உணர்வு பூர்வமான துருப்பு சீட்டாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட வரலாற்று ஆய்வு ஒன்றில் மெசபொடோமியா காலத்திலேயே அடக்க முடியாத உணர்வுகளை வெளிப்படுத்த முத்தம் உபயோகப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
முத்தத்தில் இத்தனை வகைகளா!
முத்தத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அதை யார் யார் எப்படி உபயோகப்படுத்துகின்றனர் என்பதில்தான் வேறுபாடு உள்ளன. அப்பா-அம்மா தங்களது குழந்தைகளுக்கு அன்பாக கன்னம் மற்றும் நெற்றி பகுதியில் முத்தம் கொடுப்பர். இது அதீத பாசத்தை வெளிப்படுத்துவதற்காக கொடுக்கப்படும் முத்தம்.
மேலும் படிக்க | குழந்தை திருமண சட்டம் என்றால் என்ன? மீறினால் என்ன தண்டனை வழங்கப்படும்?
உதட்டோடு உதடு முத்தம்:
ஒருவர் மீது ஒருவர் அதீத காதல் உணர்வு கொண்டிருந்தால் கொடுக்கப்படும் முத்தம் இது. வெறும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது ஒரு வகை. ஃப்ரெஞ் கிஸ் என்பது இன்னொரு வகை. இதில், முத்தம் கொடுக்கும் இருவரது நாக்கும் பயன்படும்.
இன்னும் பல..!
மேற்கூறியவை மட்டுமன்றி, எண்ணிலடங்கா பல முத்தங்கள் உள்ளன. ஏஞ்சல் கிஸ், ஹிக்கி, ஸ்பைடர் மேன் கிஸ் என பல முத்தங்கள் உள்ளன.
முத்தத்தால் ஏற்படும் பலன்கள்:
முத்தம் கொடுக்கையில் நாம் சுவாசத்தை சிறிது நேரம் அடக்கிக்கொள்வோம். இது நம்மை அறியாமல் நாமே செய்யும் மூச்சு பயிற்சி. முத்தம் கொடுத்த பின், வேகமாக மூச்சு விடுவோம். சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கும் நாம் முத்தம் கொடுத்த பிறகு ஒரு நிமிடத்திற்கு 60 முறை சுவாசிப்போம். நாம் அதிகமாக மூச்சை உள்ளுக்குள் இழுத்து வெளியே விடுவதன் மூலம், நுரையீரல் சம்பந்தமாக பிரச்சனைகள் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கொழுப்பை குறைக்கும்..?
சுமார் 43 வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வில், வேலைக்கு செல்வதற்கு முன்பு தங்கள் மனைவிகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு செல்லும் கணவன் மார்களுக்கு குறைவான விபத்துகள் ஏற்படுவதாக்வும் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை பரிமாறிக்கொள்ள முத்தம் உதவுவதாகவும் இதனால் நோயெதிர்ப்பு சக்திகள் பெருகுவுதகாகவும் சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முத்தமிடும்முன் நமக்கு உருவாகும் உமிழ்நீர் பல ஆபத்தான பாக்டீரியாக்களை அழிக்கும் எனவும் மருத்துவர்களால் நம்பப்படுகிறது. ஒரு நிமிடம் முழுமையாக முத்தமிடுவதால் முகத்தில் உள்ள 34 தசைகள் வேலை செய்யுமாம். இதனால் 26 கலோரிகள் குறைவதாக சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உடலுறவு கொள்வதற்கு முன்பு முத்தம் கொடுப்பது, இல்வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும் என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏனென்றால், முத்தம் கொடுக்கையில் நமக்கு மகிழ்ச்சி தரும் பல ஹார்மோன்கள் தாறுமாறாக வேலை செய்யுமாம். நமது உடலில் உள்ள டோபோமைன், ஆக்ஸிடாசின், செரொடொனின் போன்ற பல திரவங்களை முத்தம் வெளியேற்றுமாம்.
சருமத்திற்கு உதவும்..
முத்தம், உங்கள் முகத்தை பளபளக்க செய்யும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? முத்தம் கொடுத்தவுடன் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி வெட்கம் வரும் அது ஏனென்றால், நமது முகத்தில் உள்ள ரத்த ஓட்டத்தை முத்தம் அதிகமாக்கும். இதனால், நம் முகம் எக்ஸ்ட்ரா பொலிவுடன் காணப்படுமாம்.
மன அழுத்தத்தை குறைக்கும்..
முத்தத்தினால் வெளியேறும் ஆக்ஸிடாசின் எனும் திரவத்தால் நமக்கு மன அழுத்தம் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 52 பேரை வைத்து 6 வாரம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 52 பேரில் ஒரு தரப்பினர் அடிக்கடி முத்தம் கொடுக்கவும் இன்னொரு தரப்பினர் எப்போதாவது முத்தம் கொடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர். ஆய்வின் முடிவில் அதிக முத்தம் கொடுத்த தரப்பினருக்கு மன அழுத்தத்தோடு சேர்ந்து கொழுப்பும் குறைந்தது தெரியவந்துள்ளது.
நோய்களும் பரவலாம்..ஜாக்கிரதை!
முத்தத்தினால் பல நன்மைகள் நடந்தாலும் அதில் நோய் பரவும் அபாயமும் உள்ளது. சளி, இருமல், ஜுரம் போன்ற காலங்களில் உங்கள பார்ட்னருக்கு முத்தம் தருவதை தவிர்க்கவும். மேலும் ஒருவரை ஒருவர் முத்தமிடுவதற்கு முன்னர் சுய சுகாதாரத்தோடு (Self-Hygiene) இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | மனைவியுடன் சண்டை வராமல் இருக்க... இந்த நான்கு விஷயங்கள் அவசியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ