லேப்டாபை மடியில் வைத்துப் பயன்படுத்தினால் ஆண், பெண் இருவருக்கும் குழந்தையின்மைப் பிரச்னையை உண்டாக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய காலகட்டத்தில் லேப்டாப் இல்லாத வீடுகளே இல்லை என்கிற அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதற்கு ஏற்ப அதனால் உருவாகும் ஆபத்துகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துகளை தெரிந்துகொள்ளாமலேயே அதை அசாதாரணமாகக் கையாளுகின்றனர். இதனால் நமக்கு ஏற்படும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?. 


லேப்டாபை மடியில் வைத்துப் பயன்படுத்தினால் ஆண், பெண் இருவருக்கும் குழந்தையின்மைப் பிரச்னையை உண்டாக்கும். இது லாப்டாப்பால் மட்டுமல்லாமல் அதில் பயன்படுத்து இண்டர்நெட் கதிர்களும் உடலை பாதிக்கும் என American Society for Reproductive Medicine தெரிவித்துள்ளது. 


மேலும், இது புற்றுநோயை உருவாக்கலாம், சருமப் புற்றுநோயை உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமன்றி உடலின் எந்த உறுப்பும் பாதிக்கப்பட்டு புற்றுநோயை உண்டாக்கலாம். கழுத்து வலி , முதுகு வலி ஏற்படும். லாப்டாபை பயன்படுத்தும்போது பலரும் சரியான அமைப்பில் அமரமாட்டார்கள். அவர்களின் சௌகரியத்திற்கு ஏற்ப அமர்வது இந்த பிரச்னையை உண்டாக்கும்.


இதனால், தூக்கமின்மை பிரச்னை வரும். அதாவது லேப்டாப் வெளிச்சம் கண்களை பாதிக்கும். இதனால், தூக்கத்தை வரவழைக்கும் மெலடோனின் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனா இன்சோம்னியா பிரச்னையால் பாதிக்கப்படுவீர்கள். எனவே, லேப்டாப் வெளிச்சத்தை குறைத்து பயன்படுத்துங்கள்.பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சியை பாதிக்கும். இதனால் குழந்தையின்மை பிரச்னை வரும். குறிப்பாக மடியில் வைத்து அதிக நேரம் பயன்படுத்தினால் விரைவில் இந்த பிரச்னை வரும்.


அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்தினால் தோல் நோய் வரும். தோல் கருமையாகும். அரிப்பு போன்றவை உண்டாகும். எனவே, லேப்டாப் பயன்படுத்தும்போது அசாதாரணமாக இல்லாமல் கவனமுடன் கையாளுவது அவசியம். வேலை இல்லாத சமயத்தில் லேப்டாப் பயன்பாட்டை குறைத்துக்கொள்வது நல்லது. அதேபோல் மடியில் வைத்து லாப்டாப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிருங்கள்.