கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என அறிந்த ஒரு பெண் பொது இடத்தில் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்றுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், மனித குலத்தின் பாதியை தனக்கு அடிமையாக்கியுள்ளது கொரோனா. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பலரும் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என அறிந்த ஒரு பெண் பொது இடத்தில் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பீஜிங்கின் ஷாப்பிங் காம்பிளக்சுக்கு அந்த பெண் வந்துள்ளார்.. ஷாப்பிங் செய்து கொண்டே இருந்தபோது, திடீரென அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது, தொலைபேசியில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டதும் அந்த பெண், "என்னது, எனக்கு கொரோனா பாசிட்டிவா" என்று அலறிக்கொண்டே அழுகிறார்... தரையில் புரண்டு அழுவதை பார்த்த அங்கிருந்தோர், விஷயத்தை புரிந்துகொண்டு வேகவேகமாக விலகி செல்ல ஆரம்பித்தனர். இதை பார்த்ததும் இன்னும் கதறுகிறார் அந்த பெண்.  



READ | Watch: வைரலாகும் சமூக இடைவெளியுடன் ‘சல்சா நடனம்’ ஆடும் ஜோடி... 


அந்த காம்ப்ளக்ஸ் வாசலில் அழுது கொண்டே உட்கார்ந்திருந்தவரை, சிறிது நேரத்தில் ஆம்புலன்சில் வந்த சுகாதார ஊழியர்கள் அழைத்து செல்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதனை ஷேர் செய்தும் வருகிறார்கள். "நீங்க சீக்கிரமா குணமாயிடுவீங்க, தைரியமா இருங்க. மனத்திடத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்" என்று அந்த வீடியோவுக்கு கீழே பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.