திரைப்படத்தில் வரும் சன்னிலியோனின் போன் நம்பருக்கு கால் செய்து அவரது ரசிகர்கள் டார்ச்சர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார். 


மேலும் தற்போது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை இணைய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இதை தவிர தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார். வரலாற்று கதையில் உருவாகும் இப்படத்தை வடிவுடையான் இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து, மலையாளத்திலும் 'ரங்கீலா' எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.  


இந்நிலையில், அர்ஜூன் பாட்டியாலா திரைப்படத்தில் வரும் சன்னிலியோனின் போன் நம்பருக்கு கால் செய்து அவரது ரசிகர்கள் டார்ச்சர் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த வாலிபர் புனித் அகர்வால். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஒரு போன் கால் வந்தது. அந்த காலில் ஒருவர் "நீங்கள் சன்னி லியோனா? நான் சன்னி லியோனிடம் பேச வேண்டும்" என கேட்டுள்ளார். அதற்க இவர் ராங் நம்பர் என சொல்லி போனை கட் செய்துள்ளார். 


போனை கட் செய்த அடுத்த நிமிடம் வேறு ஒரு எண்ணில் இருந்து மீண்டும் சன்னி லியோனை கேட்டு அடுத்த போன் வந்தது அதையும் கேட்டு ராங் நம்பர் என சொல்லி கட் செய்து விட்டார். அதன்பின் தெடார்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. இது ஏன் வருகிறது யார் இதை செய்கிறார்கள் என தெரியாமல் புனித் திணறினார். 


ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி கால் செய்த ஒருவரிடமே "இது சன்னி லியான் நம்பர் என யார் உங்களுக்கு சொன்னது? " என கேட்டார். அதற்கு அவர் தான் இன்று தான்ன் "அர்ஜூன் பாட்டியாலா" என்ற திரைப்படத்திற்கு சென்றிருந்ததாகவும், அந்த திரைப்படத்தில் சன்னி லியோன் கேமியோ ரோலில் நடித்திருந்ததாகவும். சன்னி லியோன் நடித்த காட்சியில் அவர் படத்தின் கதாநாயகன் தில்ஜித்திடம் ஒரு போன் நம்பரை கொடுத்ததாகவும் அந்த போன் நம்பர் சன்னிலியோனின் உண்மையான நம்பர் என நினைத்து கால் செய்ததாகவும் தெரிவித்தார். 


அதன் பின் தான் புனித்திற்கு நடப்பது என்னவென்பதே புரிந்தது. தொடர்ந்து போன்கால்கள் வந்து கொண்டே இருந்தது. அதில் பேசியவர்களில் சிலர் ஆபாசமாகவும், முறைகேடான வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசியுள்ளனர். 


இதனால் இது குறித்து புனித் அகர்வால் போலீசில் அந்த திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்துள்ளார். மேலும் திரைப்படத்தில் தனது செல்போன் எண்ணை தனது அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக கோர்ட்டை நாடவுள்ளதாகவும் புனித் தெரிவித்துள்ளார்.