சமநிலையாக இருப்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கமாகும்.  வேலை செய்வது, சீரான வாழ்க்கை வாழ்வது, அளவுடன் சாப்பிடுவது போன்ற அனைத்திலும் நாம் கவனமாக செயல்படுகிறோம்.  ஒவ்வொன்றிலும் நாம் கவனமுடன் செயலாற்ற வேண்டும், அவ்வாறு செய்தால் தான் வாழ்க்கை வளமாக இருக்கும்.  அவ்வாறு வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சில எளிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மரணத்திற்கு பிறகு மறுபிறவி சாத்தியமா? அமெரிக்க ஆய்வாளர் சொல்வது என்ன?


காலை மற்றும் மாலையில் நீங்கள் கடைபிடிக்கும் சில நல்ல விஷயங்கள் உங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்.  காலையை சிறப்பானதாக தொடங்குங்கள், காலை எழுந்ததும் யோகா செய்வதன் மூலம் உங்க நாளை தொடங்கலாம் அல்லது சத்தான காலை உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் அன்றைய நாளை தொடங்கலாம்.  இவ்வாறு நல்லதாக நாளை தொடங்குவது உங்களுக்கு வெற்றி பாதையை ஏற்படுத்தி கொடுக்கும்.  காலையை எவ்வாறு தொடங்குகிறீர்களோ அதேபோல இரவையும் சிறப்பானதாக முடிக்க வேண்டும்.  மாலை சில எளிமையான உடற்பயிற்சிகள் அல்லது யோகாசனங்களை செய்யலாம்.  படுக்கைக்கு செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே உங்கள் மொபைலை ஒதுக்கி வையுங்கள், இதெல்லாம் நாலா தூக்கத்திற்கு வலி வகுக்கும்.



மேலும் ஒரே இடத்தில நிலையாக இருக்காமல் உடலுக்கு அசைவு கொடுங்கள், அதிகப்படியான வியர்வை உடலில் இருந்து வெளியேறுவது உடலுக்கு நல்லது.  இவ்வாறு உடலுக்கு அடிக்கடி அசைவு கொடுப்பதனால் நீங்கள் உங்கள் நேரத்தை ஜிம்மிற்கு சென்று செலவழிக்க தேவையில்லை.  சிறிது தூரம் நடப்பது, 10 ஸ்குவாட்ஸ் அல்லது 10 புஷ்அப் செய்வது போன்றவற்றை அடிக்கடி செய்யலாம்.  இவ்வாறு செய்வதால் உடலும், மனமும் உறுதியாக இருக்கும்.  இந்த சிறிய செயல்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்.



உங்கள் மன அழுத்தத்தை குறைக்க மற்றொரு வழி உணவை கவனமுடன் உண்ணுதல்.  டிவி பார்த்துக்கொண்டோ, மொபைல் அல்லது கணினி பயன்படுத்திக்கொண்டோ உணவை உண்ணுதல் கவன சிதறலை ஏற்படுத்தும்.  இவ்வாறு உணவருந்தும்போது சிலர் அதிகமான உணவை உண்ண நேரிடும், அது ஆபத்தை ஏற்படுத்தும்.  எப்பொழுதும் பொறுமையாக உணவை ரசித்து உண்ண வேண்டும்.  சிலருக்கு அடிக்கடி பசியுணர்வு ஏற்படும், அப்படி உள்ளவர்கள் 1 க்ளாஸ் தண்ணீரை பருகலாம்.  சத்து நிறைந்த தின்பண்டங்களையும் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.  வால்நட்ஸ், நம்கீன், கிரானோலா பைட்ஸ் போன்றவற்றை சத்தானவற்றை உண்ணலாம்.  இவ்வாறு சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சீரான வாழ்க்கையை வாழலாம்.


மேலும் படிக்க | பிரச்சனையில்லாத வாழ்க்கை வேண்டுமா; இந்த ‘5’ ராசிகள் முத்து அணிய வேண்டாம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR