தனுஷ், ஐஸ்வா்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள வடசென்னை படத்தின் டிவிட்டர் கருத்து என்ன?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வடசென்னை.


இப்படத்தில் ராம், இயக்குனர் அமீர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிசோர், கருணாஸ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


மூன்று பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதற் பகுதி தற்போது நிறைவடைந்து இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தின் பாடல்கள் மற்றும் மேக்கிங் வீடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டனர்.


அனைத்து பாடல்களும் ரசிகர்களை வசியப்படுத்தியுள்ளது என்றால் குறிப்பாக 'கோவிந்தமவாள', 'மாடியில நிக்குற மான் குட்டி' பாடல்கள் வைரலாகி வருகின்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. 


இந்நிலையில் தற்போது இன்று வெளியாகிவுள்ள முதல் பாகத்தை தனுஷ் ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் படம் பார்த்தவர்கள் கூறும் கருத்துகளை இங்கு காணலாம்.