உலகம் முழுவதும் காதலர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நாள் வந்துவிட்டது.  பிப்ரவரி-14ம் தேதியான இன்று காதலர் தினத்தை கொண்டாட பிப்ரவரி-7ம் தேதியிலிருந்தே உலகெங்கும் காதலர்கள் காதலர் தின வாரத்தை கொண்டாட தொடங்கிவிட்டனர்.  அதுவும் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில்  இன்றைய தினத்தில் பூங்காக்கள், தியேட்டர்கள் என அனைத்து இடத்திலும் காதல் ஜோடிகளின் கூட்டம் களைகட்டும்.  ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தன்று சில டிரஸ் கோட்கள் இருக்கும், அந்த வகையில் இந்த ஆண்டு காதலர் ஆண்டு காதலர் என்னென்ன ட்ரெஸ் கோட்கள் உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 'கிஸ்' பண்றதுல இத்தனை வகை இருக்கா?


1 )சிவப்பு 
2) கருப்பு 
3) பச்சை 
4) வெள்ளை 
5) ஆரஞ்சு 
6) பிங்க் 
7) மஞ்சள் 
8) ஊதா 


1) சிவப்பு நிறம் :


ஒவ்வொரு வருடமும் தவறாமல் சிவப்பு நிறம் இடம்பெற்று விடும்.  அதேபோல இந்த வருடமும் சிவப்பு நிற ட்ரெஸ் கோட் உள்ளது.  சிவப்பு நிறத்தில் இன்று ஆடை அணிந்திருந்தால் அவர்கள் ஏற்கனவே ஒருவரை காதலித்து அவர்களுடன் உறவில் இருக்கிறார்கள் என்று அர்த்தம் ஆகும்.


2) கருப்பு நிறம் :


கருப்பு நிறம் எப்போதும் வெறுப்பை காட்டுவதாக அமையும்.  அதனால் இந்த ஆண்டு காதலர் தினத்தில் கருப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்தால் அவர்கள் காதலை வெறுக்கிறார்கள் அல்லது அவர்கள் காதல் மீது நாட்டம் இல்லை என்றும் அர்த்தம் ஆகும்.


3) பச்சை நிறம் :


பச்சை நிறம் எப்போதும் ஏற்புடையத்தன்மையையே பிரதிபலிக்கிறது.  இன்று பச்சை நிறத்தில் ஆடை அணிந்திருந்தால் அவர்கள் யாரோ ஒருவரின்  காதலை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்று அர்த்தம் ஆகும்.


4) வெள்ளை நிறம் :


வெள்ளை நிறம் எப்போதும் ஒரு மென்மையான தன்மையை பிரதிபலிக்கிறது.  இன்றைய தினத்தில் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தால் ஏற்கனவே அவருக்கு இன்னொருவருடன் நிச்சயம் ஆகிவிட்டது அல்லது அவர் ஏற்கனவே உறவில் இருக்கிறார் என்று அர்த்தம் ஆகும்.


5) ஆரஞ்சு நிறம் :


இன்றைய தினத்தில் ஆரஞ்சு நிறத்தில் உடை அணிந்திருந்தால் அவர்கள் யாரோ ஒருவரிடம் அவர்களது காதலை வெளிப்படுத்த போகிறார்கள் என்பது அர்த்தம் ஆகும்.


6) பிங்க் நிறம் :


பொதுவாக பெண்களுக்கு பிடித்த நிறம் பிங்க்.  இன்றைய தினத்தில் பிங்க் நிறத்தில் ஆடை அணிந்திருந்தால் அவர்கள் தற்போது தான் ஒருவரது காதலை ஏற்று கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம் ஆகும்.


7) மஞ்சள் நிறம் :


மஞ்சள் நிறம் பொதுவாக மங்களகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.  ஆனால் இன்றைய தினத்தில் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள் அவர்கள் காதலில் தோல்வியுற்று இருக்கிறார்கள் என்று அர்த்தம் ஆகும்.


8) ஊதா நிறம் :


இன்றைய தினத்தில் ஊதா நிறத்தில் ஆடை அணிந்திருந்தால் அவர்கள் காதலை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர்களிடம் யார் வேண்டுமானாலும் காதலை தெரிவிக்கலாம் என்றது அர்த்தம் ஆகும்.


மேலும் படிக்க | 'டெடி டே' - என்ன ஸ்பெஷல் இன்று!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR