பிப்ரவரி 14ம் தேதி வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 7ம் தேதி முதல் காதலர் தின வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த தினங்கள் காதலர்கள் அவர்களின் காதல்களை கொண்டாடவும், அவர்களது துணை மீது அவர்கள் வைத்துள்ள அதீத அன்பை வெளிப்படுத்தவே இத்தகைய தினங்கள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ரோஸ் டே, ப்ரொபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே என்று 6 நாட்களும் காதலர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பிப்ரவரி-13ம் தேதியான இன்று 'கிஸ் டே' கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்தம் 10 வகையான முத்தங்கள் உள்ளது, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தத்தை கொண்டுள்ளது. 'கிஸ் டே' கொண்டாடும் இன்றைய தினத்தில் அந்தமுத்தங்கள் வகைகள் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் அறிந்துகொள்வோம்.
மேலும் படிக்க | காதலர் தினம் 2022: இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான மனைவிகள், அட்டகாசமான காதலிகள்
1) ஏர் கிஸ் (air kiss ) :
இது ஒரு கண்ணியமான முத்தமாக கருதப்படுகிறது, இந்த வகை முத்தத்தை தூரத்தில் இருந்துகொண்டே காதலன்/காதலிக்கு சைகை மூலமாக கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளலாம்.
2) நெற்றியில் முத்தம் (forehead kiss ) :
நெற்றியில் முத்தமிடுவது உங்கள் துணை மீது நீங்கள் வைத்துள்ள பாசத்தை குறிப்பதாக உள்ளது. நெற்றியில் உங்கள் காதலன்/காதலிக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் அவர்களை நீங்கள் ஸ்பெஷலாக உணரச்செய்யலாம்.
3) கையில் முத்தம் (hand kiss) :
கையில் முத்தம் கொடுப்பது மரியாதையையும், அன்பையும் வெளிப்படுவதாக அமைகிறது, இதுவும் கண்ணியமான முத்தமாக கருதப்படுகிறது.
4) பட்டர்ப்ளை முத்தம் (butterfly kiss) :
இந்த வகையான முத்தத்தில் உங்களது உதடுகளால் முத்தமிட தேவையில்லை, இந்த வகை முத்தமிடுதலில் ஒருவரை ஒருவர் தொடும் வகையில் இருவரின் நெற்றியையும் ஒட்டிக்கொண்டு அன்பை பரிமாறி கொள்வார்கள்.
5) பெக் கிஸ் (peck kiss) :
இந்த வகை முத்தமானது இனிமையான முறையில் உங்களது அன்பையும், பாசத்தையும் உங்கள் காதலன்/காதலிக்கு வெளிபடுத்தும் முறையாகும்.
6) எஸ்கிமோ கிஸ் (eskimo kiss ) :
எஸ்கிமோ கிஸ் என்பது ஒருவரது மூக்கை கொண்டு மற்றொருவரது மூக்குடன் இணைத்து அன்பை பரிமாறிக்கொள்வதாகும்.
7) ஆங்கிள் கிஸ் (angle kiss) :
இது ஒரு புதுவிதமான முத்தமாக பார்க்கப்படுகிறது, இந்த வகை முத்தத்தில் காதலர்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் விதமாக கண் இமைகளில் முத்தம் கொடுப்பதாகும்.
8) மூக்கில் முத்தம் (nose kiss) :
மூக்கில் முத்தமிடுவதன் மூலம் ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் மதிப்பு வெளிப்படுகிறது, இந்த வகை முத்தத்தில் அன்போடு ஒருவரது மூக்கில் முத்தமிட வேண்டும்.
9) கன்னத்தில் முத்தம் (cheek kiss) :
இந்த வகையான முத்தமானது நட்புறவு மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது, இந்த வகை முத்தத்தை நண்பர்கள், காதலர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளலாம்.
10) பிரெஞ்சு கிஸ் (french kiss) :
இந்த வகை முத்தம் அனைத்து விதமான காதலர்களுக்கும் பிடித்தமான ஒன்றாகும், இந்த வகை முத்தம் அந்தரங்கத்தை குறிக்கும் வகையில் அமைகிறது.
மேலும் படிக்க | மந்திரம் செய்யும் கட்டிப்பிடி தந்திரம்! ஒரு நாளைக்கு எத்தனை முறை கட்டிப்பிடிக்கலாம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR