Hero அளித்த good news: கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பைக், ஸ்கூட்டரை வாங்கலாம்
கொரோனா தொற்றுநோயின் நேரடி தாக்கம் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனையில் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்க புதுமையான வழிகளைப் பின்பற்றுகின்றன.
Hero Motocorp virtual showroom: கொரோனா தொற்று உலக மக்களை பாடாய் படுத்தி வருகிறது. கொரோனா தொற்றுநோயின் நேரடி தாக்கம் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனையில் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்க புதுமையான வழிகளைப் பின்பற்றுகின்றன.
இது போன்ற ஒரு நூதன முயற்சியை நாட்டின் சிறந்த இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் எடுத்துள்ளது. நீங்கள் ஹீரோவின் பைக் அல்லது ஸ்கூட்டரை வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், உங்களுக்கு இந்த கொரோனா காலத்தில் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. நீங்கள் இனி நிறுவனத்தின் ஷோரூமுக்குச் செல்லத் தேவையில்லை. நீங்கள் விரும்பும் பைக் / ஸ்கூட்டரை வீட்டிலிருந்தே வாங்க முடியும்.
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) ஒரு மெய்நிகர் ஷோரூமை (Virtual Showroom) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த மாடல்களைக் காண முடியும். கோவிட் 19 தொற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் மிகவும் வசதியான டிஜிட்டல் அனுபவத்தின் மூலம் தங்களுக்கு விருப்பமான மாடலை வாங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.
வர்சுவல் ஷோரூம் மூலம் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை வீட்டில் உட்கார்ந்து டிஜிட்டல் முறையில் வாங்கலாம் என்று ஹீரோ மோட்டோகார்ப் கூறுகிறது. இந்த வர்சுவல் ஷோரூம் மூலம், வாடிக்கையாளர்கள் பைக் / ஸ்கூட்டர் (Scooter) மாதிரிகளின் 360 டிகிரி காட்சிகளை காண முடியும். இதில், வாடிக்கையாளர் தனது வீட்டிலிருந்து டிஜிட்டல் முறையில் தங்களுக்கு பிடித்தமான மாதிரியின் அம்சம், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்பு பற்றிய தகவல்களை எளிதாகப் பெற முடியும்.
ALSO READ: குறைந்த விலை, கலக்கல் அம்சங்கள், HERO-வின் அசத்தல் அறிமுகம் Hero HF 100
டீலர்ஷிப் பலம் பெறும்
டிஜிட்டல் விற்பனை செல்கள் நிறுவனத்தின் விற்பனையாளர்களை பலப்படுத்தும் என்று நிறுவனம் கூறுகிறது. தனி மனித இடைவெளி மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு, எங்கள் வாடிக்கையாளர்களுக்காக இந்த சேவையை நாங்கள் தொடங்கினோம் என்று நிறுவனத்தின் விற்பனை பிரிவின் தலைவரான நவீன் சவுகான் பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.
"வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மதிப்புகளை நாங்கள் அதிகப்படுத்துகிறோம். இதைத் தொடர்ந்து நாங்கள் செய்வோம்" என்று அவர் கூறுகிறார். "மெசேஜிங் செயலி, அதாவது செய்தியிடல் செயலியான பெஸ்ட் சாட்போட் சேவையை அறிமுகப்படுத்திய பின்னர், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் ஷோரூம் விருப்பத்தை வழங்கியுள்ளோம். ஹீரோ மோட்டோ கார்ப் ஏப்ரல் 22 முதல் மே 1 வரை அதன் அனைத்து ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது." என்று சவுகான் மேலும் தெரிவித்தார்.
மார்ச் மாதத்தில் மொத்தம் 5.76 லட்சம் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டன.
ஹீரோ மோட்டோகார்ப் மார்ச் 2021 இல் மொத்தம் 5,76,957 இரு சக்கர (Two-wheeler) வாகனங்களை விற்றது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 3,34,647 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்தது. ஹீரோ மோட்டோகார்ப் 2020-21 நிதியாண்டில் 57,91,539 இருசக்கர வாகனங்களை விற்றது. இதற்கு முந்தைய நிதியாண்டான 2019-20 நிதியாண்டில், மொத்தம் 64,09,719 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
ALSO READ: Bajaj பல்சர் என்எஸ்125 vs கேடிஎம் டியூக் 125: விலை, முழு விவரக்குறிப்புகள் இங்கே
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR