சிகிச்சைக்கு வந்த 1,800 பெண்களை ரகசிய கேமராக்கள் மூலம் நிர்வாணமாக ஆபாச வீடியோ எடுத்துள்ளது அம்பலம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் கலிஃபோர்னியாமாகாணத்தில் உள்ள சான்டிகோ நகரில் 'Sharp Grossmont' என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்களுக்கான பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெண்களுக்கான பிரசவம், கருத்தடை, கருத்தரிப்பு, கருச்சிதைவு உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், மருத்துவமனையின் சிகிச்சை அறைகளில் ரகசிய கேமராக்கள் வைத்து, சிகிச்சை பெற வந்த பெண்களுக்கு தெரியாமல், அவர்களை ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளனர். சிகிச்சைக்கு வந்த சுமார் 1,800 பெண்களின் வீடியோக்கள் அதில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், பல பெண்கள் மயக்கமடைந்த நிலையிலும், ஒரு சிலர் பாதி மயக்க நிலையிலுமாக இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 


விசாரணையில் மருத்துவமனை தரப்பில் கூறுகையில், "நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை கண்காணிப்பதற்காகவே இந்த கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர்களும், நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கின்றனரா? என்பதை கண்காணிக்கவும் தான் கேமராக்கள் பொருத்தப்பட்டது. மற்றபடி, ஆபாச வீடியோக்கள் எடுப்பது எங்களது நோக்கமல்ல" என தெரிவிக்கப்பட்டுள்ளது.