அதிக கொலஸ்ட்ரால் தான் மாரடைப்புக்கு காரணமா? தப்பா நினைச்சிட்டு இருக்காதீங்க
High Cholesterol : மாரடைப்புக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதே காரணம் என்ற பிம்பம் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், அதுமட்டுமே காரணம் அல்ல என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
High Cholesterol Latest News : அண்மைக்காலமாக அதிகரித்து வரும் மாரடைப்புகளுக்கு கொழுப்புச்சத்து உடலில் அதிகமாக இருப்பதே காரணம் என்றும், குறிப்பாக கெட்ட கொழுப்பு அதிகமாக சேர்ந்ததால் இத்தகைய பிரச்சனைகள் வருகிறது என்றும் கூறப்படுகிறது. இதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது என்பது உண்மை தான். ஏனென்றால் கொழுப்பு அதிகரிக்கும்போது இதயம் சார்ந்த பிரச்சனைகள் இயல்பாகவே அதிகரிக்கும். அதற்காக ஒட்டுமொத்தமாக கொழுப்புச் சத்து கூடாது என்ற எண்ணமும் அச்சமும் பலருக்கு எழுந்திருக்கிறது. அதனால் கொழுப்புச் சத்து குறித்த புரிதல் நமக்கு அவசியமாகிறது.
கொழுப்பு என்பது நம் உடலில் கல்லீரலில் உற்பத்தியாகும் ஒரு வகையான மெழுகு பொருள். இது இயற்கையாகவே உடலில் உற்பத்தியாகும் என்றாலும், நாம் உண்ணும் உணவு வழியாகவும் கொழுப்புச் சத்துக்கு அதிகரிக்கும். இதில் இரண்டு வகையான கொழுப்புகள் பொதுவாக அடையாளப்படுத்தப்படுகின்றன. நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்பதுதான் அவை. ஹெடிஎல் கொழுப்பு கெட்டது, எல்டிஎல் கொழுப்பு நல்லது.
மேலும் படிக்க | இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?
கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்போது நாளடைவில் இதயத்துக்கு செல்லும் தமனிகளில் தேங்கி மாரடைப்பு உள்ளிட்ட உயிரிழப்பை ஏற்படுத்தும் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகின்றன. அதேநேரத்தில் நீரிழிவு, பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு, தமனி குறுக்கம், பிளேக் உருவாக்கம் உள்ளிட்ட உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்கும் கொழுப்புச் சத்தே காரணமாக இருக்கின்றன. ஆனால் இவற்றை நம்மால் சரி செய்ய முடியும். தினசரி உடற்பயிற்சி, உணவு, உடல் பரிசோதனை ஆகியவை மூலம் அதிகரிக்கும் கொழுப்புகளை சீராக்க முடியும்.
ஆனால் கொழுப்பு சத்தே வேண்டாம் என்பது முட்டாள்தனமானது. ஏனென்றால் செல் உருவாக்கத்தில் இருந்து ஹார்மோன்கள் உற்பத்தியாவதற்கு வரை கொழுப்பு அத்தியாவசியம். நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குஏற்கனவே கூறியதுபோல் சமச்சீரான உணவு, பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிட்டும், நொறுக்குத் தீனிகள், ஜிங்க் உணவுகள், ஆரோக்கியத்துக்கு கேடான உணவுகளை உண்பதை தவிர்த்தாலே போதும். உடலில் கெட்ட கொழுப்பு சேராது.
சரி, கொழுப்பு அதிகரிப்பதால் மட்டுமே தான் மாரடைப்பு வருகிறதா? என்றால் அது உண்மையில்லை. ஏனென்றால் புகைப்பிடித்தல், தினசரி உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற மோசமான வாழ்க்கை முறையும் இதயப் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றன. உங்களுக்கு மாரடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நல்ல உணவுகளை உண்பது, உடற்பயிற்சி செய்வது, மன ஆரோக்கியத்தை பேணுவது, மருத்து ஆலோசனையை பெற்றுக் கொள்வது போன்ற விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள். இது ஆண், பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ